பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் மருத்துவர் இராமதாசு அய்யா ஆலோசனை - Agnipuratchi

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் மருத்துவர் இராமதாசு அய்யா ஆலோசனை

Share This

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் மருத்துவர் இராமதாசு அய்யா ஆலோசனை

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும்  மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக  ஆலோசனை நடைபெற்றது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார்,  திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் கே.என். சேகர், ஆலப்பாக்கம் சேகர்,  தினேஷ்குமார், ரமேஷ், சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர்கள்  விஜயன், ஞானப்பிரகாசம், ரமேஷ், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் மகேஷ்குமார், அரி கிருஷ்ணன், மாவட்ட தலைவர் உமாபதி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட  மாவட்ட செயலாளர்கள் நிர்மல்குமார், இராதாகிருஷ்ணன், ஜே.எம்.சேகர், கணபதி, மாவட்ட தலைவர்கள் ஜேஷ்வா, சதீஷ், கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். மக்கள் சந்திப்புகள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தும்படி அறிவுறுத்தினார்கள்.

நாளை இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள்  ஆலோசனை நடத்த உள்ளார்கள்.
                                                         

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages