அக்னிப்புரட்சி இன்றைய (03.03.2022) முக்கிய செய்திகள்.
* ஹங்கேரியில் இருந்து சி17 ரக போர் விமானம் மூலம் 220 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
ருமேனியாவில் இருந்து முதல் போர் விமானத்தில் ஏற்கனவே 200 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
* உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டுமென ஐ.நா. சபையில் தீர்மானம்.
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவு - இந்தியா புறக்கணிப்பு.
* பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் உரையாடல்;
கார்கிவ் நகரில் இந்திய மாணவர்களை உக்ரைன் மனித கேடயமாக பயன்படுத்துகிறது என புதின் குற்றச்சாட்டு.
* சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 115 டாலராக உயர்வு!
* சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப் வீரர் யஸ்பால் (26), கழிவறையில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை - அதிகாரிகள், போலீசார் விசாரணை.
* ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பால், 2017ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தவர் தற்கொலை - போலீசார் விசாரணை.
* ரஷ்ய அறிக்கைக்கு இந்தியா விளக்கம்:
இந்திய மாணவர்களை பணயக்கைதிகளாக உக்ரேனிய படைகள் பிடித்து வைத்துள்ளதாக வெளியான செய்தி குறித்து தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை.
* டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம்.
டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு.
மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.
* அதிமுக தலைமையை சசிகலா ஏற்கவேண்டும்..
தேனி மாவட்ட செயலாளர் சையதுகானை தொடர்ந்து, கவுண்டம்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியும் பேட்டி
அதிமுகவை டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்
* சசிகலாவை சேர்க்க சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும் - புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன்.
* அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவு.
* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல; மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது
தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.
* திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு;
2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு
மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணை தலைவர் பதவிகளில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு.
* நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு அதிகமிருக்கும் என்பதால், சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
* கும்பகோணம் மாநகராட்யின் மேயர் பொறுப்பிற்கு வேட்பாளராக கே.சரவணன் தேர்வு - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.
* அனைத்து கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.
ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் மட்டும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
* மறைமுகத் தேர்தல் இடப்பங்கீடு; விசிக வேட்பாளர்களை அறிவித்தார் கட்சித் தலைவர் திருமாவளவன்
கடலூர் துணை மேயர் வேட்பாளர் ப.தாமரைச் செல்வன்.
ஜெயங்கொண்டம் சேர்மன் வேட்பாளர் சுமதி சிவக்குமார்.
நெல்லிக்குப்பம் சேர்மன் வேட்பாளர் கிரிஜா திருமாறன்.
திண்டிவனம் துணை சேர்மன் வேட்பாளர் ராஜலட்சுமி.
பெரியகுளம் துணை சேர்மன் வேட்பாளர் பிரேம்குமார்.
ராணிப்பேட்டை துணை சேர்மன் வேட்பாளர் ரமேஷ்கண்ணா.
பெண்னாடம் பேரூராட்சி தலைவர் வேட்பாளர் அமுதலட்சுமி.
காட்லாடம்பட்டி பேரூராட்சி தலைவர் வேட்பாளர் குமார்.
மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் வேட்பாளர் சின்னவேடி.
* தமிழகம் முழுவதும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு மழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.
* உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் அடைகலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழக எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்எம் அப்துல்லா மற்றும் எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆகியோர் நியமனம்.
இவர்களுடன் 4 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் சேர்ந்து மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எந்த நிலையில் கல்வி கற்பிப்பார்கள்? - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி.
பள்ளி மாணவர்களுக்கு, எந்த வகையான ஒழுக்கத்தை போதிப்பார்கள்? - நீதிபதி.
ஆசிரியர் பணி இட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையின் போது நீதிபதி சுப்பிரமணியம் கேள்வி.
* மதுரையில் அரசியில் கட்சி சார்பாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் அரசியில் கட்சி சார்பாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி.
தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
சம்பந்தப்பட்ட அதிகாரியை மார்ச் 7ல் ஆஜராகும்படியும், வீடியோ பதிவு நகலை பாதுகாக்கவும் ஆணை.
* நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி-செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல்.
* மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்க தமிழக அரசு அமைத்துள்ள குழு எந்த அளவிற்கு பயனளிக்குமென தெரியவில்லை
மத்திய அரசு மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இதை மற்ற நாடுகள் விரும்புமா என தெரியவில்லை: மத்திய வெளியுறவுத்துறை
No comments:
Post a Comment