அக்னிப்புரட்சி இன்றைய (04.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.03.2022) முக்கிய செய்திகள்.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்: பெரும்பாலான பதவிகளை போட்டியின்றி கைப்பற்றுகிறது திமுக கூட்டணி கட்சி.

* உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து வந்த மாணவர் சுடப்பட்டதால் பாதியிலேயே திரும்ப அழைத்து செல்லப்பட்டதாக தகவல் - மத்திய அமைச்சர் வி.கே.சிங். 

குறைந்த பாதிப்புடன் இந்தியர்களை அழைத்துவர முயற்சி - மத்திய அமைச்சர் வி.கே.சிங்.

* பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை அமர வைப்பது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும்.

பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படக் கூடாது - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அதிரடி உத்தரவு.

புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் -  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்

* திருத்துறைப்பூண்டி சிபிஎம் நிர்வாகி ராமலோக ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு; இவர் நகர்மன்ற துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்!

* சாமிதோப்பு அய்யா வைகுண்டர் 190வது அவதார தின விழாவையொட்டி,
கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ராட் மார்ஷ்(74) உடல்நலக்குறைவால் காலமானார்

* சபோரிஸியா அணுமின் நிலையத்தின் முக்கிய உபகரணங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் உக்ரைன் தெரிவித்துள்ளதாக தகவல்

அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டமிடுகிறது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து

அணுமின் நிலையங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குகிறது
உக்ரைனில் சுமார் 15 அணுஉலை மையங்கள் இருப்பதாகவும் அவற்றை ரஷ்யா தாக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமும் அழிவைச் சந்திக்கும்: ஜலன்ஸ்கி

* தேனியில் நாளை நடைபெற இருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட அதிமுக தலைமை அறிவித்துள்ளது

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 201 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சகம்

* TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது

66 பணியிடங்களுக்கு நடக்கும் இந்த தேர்வை, முதல் நிலை தேர்வில் வென்ற 3,800 பேர் எழுத உள்ளனர்

* நாகை, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது

உக்ரைனின் சபோரிஸியா அணு மின்நிலையத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து ரஷ்ய துருப்புகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிர்ரோ குலேபா தகவல்

* ரஷ்யா படைகள் தாக்குதலை அடுத்து, IAEA தலைவர், உக்ரைன் பிரதமர் மற்றும் அணுஉலை இயக்குபவரிடம் பேசி உற்பத்தியை நிறுத்த கேட்டுக் கொண்டார்.

தாக்குதலில் சேதமடைந்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்பதால் உற்பத்தியை நிறுத்த கூறியுள்ளார்.

* தமிழக அரசின் ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு.

1 லிட்டர் ஆவின் நெய் ₨515ல் இருந்து ₨535 ஆக உயர்வு.
அரை லிட்டர் தயிர் ₨ 27ல் லிருந்து ₨30 ஆக உயர்வு.

குல்பி ₨25ல் இருந்து ₨30 ஆக உயர்வு.
200 கிராம் பாதாம் பவுடர் ₨80ல்  இருந்து ₨100 ஆக உயர்வு.

* இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை 130 பேருந்துகள் மூலம் உக்ரைனில் இருந்து மீட்க ரஷ்யா ஏற்பாடு - உணவு, மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிப்பு

* கோவையின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் திமுகவின் கல்பனா ஆனந்தகுமார்!

* கூகுள் நிறுவனம் ரஷ்யாவில் தமது விளம்பர வணிகத்தை நிறுத்தி வைத்தது

* ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுக வேட்பாளர் சத்யா வெற்றி

பரபரப்பாக நடந்த தேர்தலில் சத்யா 27 வாக்குகளும், அதிமுகவின் பால நாராயணன் 18 வாக்குகளும் பெற்றனர்

* வடக்கனந்தல் பேரூராட்சி  தலைவராக ஒய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் தேர்வு!

* உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செல்வியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் போட்டி வேட்பாளர் சகுந்தலா வெற்றி

* மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வானார்!

* திருமுருகன்பூண்டி நகராட்சியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர் குமார் வெற்றி

குமார் 15 வாக்குகளும், சுப்பிரமணியம் 12 வாக்குகளும் பெற்றனர்

* தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி

* நாகர்கோவில் மேயர் மறைமுக தேர்தல் - பாஜக வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் மகேஷ் வெற்றி

* அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விசிகவை சேர்ந்த சுமதி போட்டியின்றி தேர்வானார்

* கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி

எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி

* கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவராக புவனேஷ்வரி தேர்வானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி ஒதுக்கிய நிலையில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக தேர்வு

* மணப்பாறை நகராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுகவின் சுதா பாஸ்கரன் வெற்றி

மொத்தமுள்ள 27 வார்டில் திமுக மற்றும் அதிமுக தலா 11 இடங்கள், சுயேச்சைகள் 5 இடங்களில் வென்ற நிலையில், மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் 15, திமுக வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றனர்

* கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமார் தலைவராக தேர்வு

* பொள்ளாச்சி நகராட்சியில் திமுக வேட்பாளர் ஷாமிலா நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

* நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி
எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி

* தென்காசி நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் சாதீர் தேர்வு

கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் பரிதா நவாப் வெற்றி

* திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவின் அன்பழகன் போட்டியின்றி தேர்வானார்!

* 73 ஆண்டுகளுக்குப் பிறகு கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில், திமுகவின் நாகராஜ் போட்டியின்றி தலைவராக தேர்வு

* திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவில் இணைந்த ராஜேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்வு

* வானிலை அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து தென்கிழக்கில் சுமார் 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம்

* அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியின் போது உலோக வளையல் கண்டுபிடிக்கப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள தொல்லியல் தளத்தில் 2ம் சுற்று அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதல் கண்டுபிடிப்பு இதுவாகும்.

சோழமாமன்னர் ராஜேந்திரசோழன் தெற்காசிய நாடுகளை வென்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தை தனது தலைவராக கொண்டு ஆட்சி செய்தார். மாளிகைமேடு என்ற இடத்தில் சோழ மன்னர்களின் அரண்மனை கட்டப்பட்டு 250 ஆண்டுகள் சோழராஜ்யம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

* உத்தரவை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை.

கூட்டணி அறத்தைக் திமுக காத்திட வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல; மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது

தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

* திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கி, பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் - சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு, பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டும் போக்கை அனுமதிக்க முடியாது.

கூட்டணி கோட்பாட்டை திமுக தலைமை பாதுகாக்கும் என நம்புகிறோம் - கே.பாலகிருஷ்ணன்

* மறைமுகத் தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

பதவி விலகாவிட்டால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் ஸ்டாலின் எச்சரிக்கை.

பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னை நேரில் வந்து சந்திக்கவும் ஸ்டாலின் உத்தரவு.

* பூவிருந்தவல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளரை போட்டியிட வைத்ததால் கட்சி தலைமை நடவடிக்கை

* சசிகலாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு

திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை தனது ஆதரவாளர்களோடு சந்தித்தார் ஓ.ராஜா

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (52) உயிரிழந்தார்

தாய்லாந்தில் தங்கியிருந்த வார்னே மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

* கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கம் - திமுக.

கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சுழற்பந்துவீச்சு ஜாம்பவானாக திகழ்ந்த ஷேன் வார்ன்:

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் 52.

கடந்த 1992ல் இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

டெஸ்ட் அரங்கில் முதன் முதலில் 700 விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமை பெற்ற வார்ன், 145 டெஸ்டில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

20ம் நுாற்றாண்டின் சிறந்த 'டாப்-5' வீரர்களில் ஒருவராக இருந்தார்.

2004 ல் இலங்கை தொடரில் 3 டெஸ்டில் 24 விக்கெட் வீழ்த்தினார்.

ஓய்வுக்குப் பின் 2008ல் இந்தியாவில் துவங்கிய ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி கேப்டனாக இருந்து முதல் கோப்பை வென்று தந்தார்.

தற்போது விடுமுறைக்காக தாய்லாந்து சென்ற இவர், மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

வார்ன் மரணத்தை உறுதி செய்த அவரது நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,' தாய்லாந்தின் கோ சாமுய் நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார் வார்ன். துாக்கத்தில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். மருத்துவ நிபுணர்கள் முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை,' என தெரிவித்துள்ளது.

* கடலூர் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் விசிகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு.

திமுக கூட்டணியில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இரண்டு பதவியிடங்களிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றதால் விசிகவினர் போராட்டம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பாண்டியன் ராஜினாமா

திருத்துறைப்பூண்டி துணைத் தலைவர் பதவி சிபிஐஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ராஜினாமா

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages