அக்னிப்புரட்சி இன்றைய (06.03.2022) முக்கிய செய்திகள்.
* புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக 1 கி.மீட்டர் தூரம் கடல் வரை நீண்டிருந்த பழைய துறைமுகப்பாலம் இடிந்து விழுந்தது.
* புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவினர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாலத்தில் 100க்கணக்கான பல மொழி திரைப்படங்கள் படமாக்கப்பட்டது.
* ரஷ்ய அதிபர் புடினுடன் உக்ரைன் போர் குறித்து விவாதிக்க
இஸ்ரேல் பிரதமர் பென்னட் மாஸ்கோவிற்கு ரகசியமாக பயணம் செய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியீடு
* உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக ரஷ்யா அறிவிப்பு
* விசா மற்றும் மாஸ்டர்கார்டு ரஷ்யாவில் தங்கள் நெட்வொர்க் சேவைகளை நிறுத்துகின்றன
* சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது
122-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
* கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், திருமங்கலம் நகர பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
* சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்.16ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் 45வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
* புனே மெட்ரோ ரயில் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புனே மாநகராட்சி வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையையும் பிரதமர் இன்று திறந்து வைத்தார்.
* கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
* M.S., மற்றும் Ph.D., படிப்புகளில் சேர வரும் 31ம் தேதிக்குள் cfr.annauniv.edu இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம்
* தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
* மிகப்பெரும் நாடுகள் கூட உக்ரைனில் சிக்கித் தவித்த தங்கள் நாட்டு மக்களை மீட்க சவால்களை சந்தித்தன.
ஆனால், உலக அரங்கில் இந்தியாவின் அதிகரித்துவரும் செல்வாக்கினால் இந்தியர்களை மீட்க முடிந்தது - பிரதமர் மோடி.
* டெஸ்ட் போட்டிகளில் 435 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவின் முந்தைய சாதனையை முறியடித்தார் அஷ்வின்
கும்ப்ளேவுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அஷ்வின்
* இந்திய அணி அபார வெற்றி.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
* 2022ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன
* கோவை: திமுக மாநில மகளிர் தொண்டர் அணி து.செயலாளர் மீனா ஜெயக்குமார் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கம் - திமுக பொதுச்செயலாளர்
* தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலை-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள், பெற்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
இல்லையேல் நடவடிக்கை உறுதி, மிரட்டல் அல்ல, மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்கள் பணியை சரியாக செய்கின்றனரா என்று கண்காணிக்கப்படுவர்; தவறு செய்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் நம்பிக்கையை காப்பாற்று வதற்காக சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
* இசை இல்லை என்றால் மனித குலம் என்னவாகியிருக்கும்? - துபாய் இசை நிகழ்ச்சியில் இசைஞானி பேச்சு...
இசையைவிட உயர்ந்த வழிபாடு வேறு எதுவுமே இல்லை உலகத்தில்... இசையை இறைவன் படைக்கவில்லை என்றால், இந்த மனிதகுலம் என்னவாகியிருக்கும்? உயர்ந்த விஷயத்திலே என்னை கிடடா நாயே என்று என்னை இதிலே போட்டுவிட்டார், வேறு எதிலும் விடவில்லை.- இசைஞானி இளையராஜா
No comments:
Post a Comment