அக்னிப்புரட்சி இன்றைய (07.03.222) முக்கிய செய்திகள்.
* தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் NSEன் முன்னாள் CEO சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது சிபிஐ
* ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் ஹங்கேரியில் இருந்து மீட்கப்பட்ட 160 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்
* உக்ரைன்-ரஷியா இடையே இன்று மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை..!
* தெலுங்கானா: கவர்னர் உரை இல்லாமல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் - இன்று பட்ஜெட் தாக்கல்
* தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்கிறது.
புதிய விலைப்பட்டியலை இன்று காலை 8 மணியளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய விலை பட்டியல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
* உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக, ரஷ்யாவில் ஒளிபரப்பு சேவையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது
* சென்னையில் 123 வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40க்கும், டீசல் லிட்டர் ₨91.43க்கும் விற்பனை
* சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை - இன்று முதல் முழுமையான நேரடி விசாரணை
* உ.பி.யில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு : 5 மாநில சட்டமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு
உத்தரப்பிரதேசம் தேர்தல் - இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டமன்ற தொகுதிகளில் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இன்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன.
வாக்கு எண்ணிக்கை வரும் 10 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
* பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் துவக்கம்
* தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
* பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை
கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் ஏற்கனவே இதே மருத்துவமனையில் தான் சிகிச்சையில் உள்ளார்
* மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு
* புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்!
* உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை 129 டாலராக உயர்வு
பிரன்ட் கச்சா எண்ணெய் விலை 129 டாலராக உயர்வு. பிப்.1ல் 97 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை ரஷ்யா - உக்ரைன் போரால் அதிகரிப்பு
* உலகம் முழுவதும் 44,63,44,028 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 37,94,93,955 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 60,19,184 பேர் உயிரிழப்பு
* மக்கள் மருந்தக திட்ட பயனாளிகள், உரிமையாளர்களுடன் பிரதமர் மோடி இன்று மதியம் 12.30 மணிக்கு கலந்துரையாடுகிறார்
* அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டின் அதிகாரிகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
* உக்ரைன்: கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத் சிங் போலந்து எல்லைக்கு வந்தடைந்தார்
போலந்து எல்லையில் இந்திய தூதர்கள் அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல்
போர் விவகாரம், இந்தியர்கள் வெளியேறுவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட வாய்ப்பு
* கடும் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,445 புள்ளிகள் குறைந்து 52,888 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 393 புள்ளிகள் குறைந்து 15,852 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
* மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் அவரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
* தமிழகத்திலேயே முதன் முதலாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் ₨150.4 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின் நிலையம்.
* ஒரு கிராம் தங்கம் விலை ₹5 ஆயிரத்தை தொட்டது:
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ₹40 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,440 ஆக அதிகரிப்பு.
ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து
ரூ.5055க்கு விறபனையாகிறது.
சவரன் ரூ.680 விலை அதிகரித்து ரூ.40,440க்கு விற்பனை.
* தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் நிச்சயம் நிறைவேறும் - வி.கே.சசிகலா அறிக்கை.
எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்களின் உறுதியோடு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கழகத்தை காப்போம்; கவலை வேண்டாம்.
ஒவ்வொரு தொண்டரின் கண்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்க்க முடிந்தது.
தொண்டர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாத வகையில் தமிழக மக்களுக்காக எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணிப்பேன் - சசிகலா.
* பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வேண்டுகோளின் பேரில் உக்ரைனில் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி வைத்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு.
கார்கிவ் , கீவ், மரியபோல், சுமி ஆகிய 4 நகரங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தற்காலிக போர் நிறுத்தம்.
* தூத்துக்குடியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை குறைகளை கேட்டறிந்தார் முதல்வர்
விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது - முதல்வர்
பெல்ஜியம் நிறுவனம் ₨ 450 கோடி முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது
கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும் - முதல்வர்
விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
வணிகர்கள், உழவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நிதிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை - முதல்வர்.
இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்கா தென்கோடி மாவட்டமான தூத்துக்குடியில் அமையவுள்ளது என்பது பெருமை.
வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும்.
அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும் - முதல்வர்
* நகைக்கடன் செய்யப்பட்ட தொகையை உடனே வழங்குக - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனடியாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* ரஷ்யாவில் டிக்டாக் சேவைகளுக்கு கட்டுப்பாடு.
ரஷ்யாவில் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக டிக்டாக் நிறுவனம் அறிவிப்பு.
ரஷ்ய அரசின் புதிய சமூக வலைதள தணிக்கை விதிகளுக்கு எதிராக இம்முடிவு என தகவல்.
* உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி - பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சு.
இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவியதற்காக செலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
சுமி நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற தொடர்ந்து உதவ பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
* 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் விசாரணையை தொடங்கியது ஆறுமுகசாமி ஆணையம்.
முதல் நாள் விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம்.
2016ல் ஜெயலலிதா பதவியேற்கும் முன்பே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது. ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்ததை அவர் மறுத்தார்.
2016ல் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது.
மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்து, பரிசோதனை செய்தேன் - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்.
ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன்.
நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை
இருப்பதாக கூறினார் ஜெயலலிதா.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்.
* உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை கைவிடக்கோரி திருச்சியில் பள்ளி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் "அமைதி பூக்கள்" எனும் தலைப்பில் அமைதிப்புறா வடிவில் அமர்ந்து வன்முறைக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
* 5 மாநில சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றது
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றது
வருகிற 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன
* பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி.
விருதுநகர்: சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு.
* நடிகர் சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூர் மாவட்டத்தில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் மனு.
சூர்யா வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கை மனு.
* உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.
உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.
கோவா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு.
* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆசிரியர் தகுதி தேர்விற்கு வரும் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்.
trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment