அக்னிப்புரட்சி இன்றைய (11.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.03.2022) முக்கிய செய்திகள்.

* சிறையில் சொகுசாக இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூரு சென்றார் சசிகலா.

சசிகலா மற்றும் இளவரசியும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ளனர்.

* 2 வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்று வரும் 3 நாள் மாநாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்பு.

* மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 173 புள்ளிகள் அதிகரித்து 55,637 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 68 புள்ளிகள் அதிகரித்து 16,662 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

* அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்-முதலமைச்சர்.

தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வனதுறை அதிகாரிகள் பங்கேற்கும் முன்று நாள் மாநாட்டின் இரண்டாம் நாளில் முதல்வர் உரை:

மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும்.

எங்களுக்கும் உங்களுக்கும் அதாவது, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது, அது மஞ்சளா இருக்கலாம், இயற்கை வளங்கள் ஆக இருக்கலாம் அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது அரசுக்கு வருமானம் பெறுவது குறித்து விவசாயிகள் ,தொழிலாளர்கள்,
சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்து கருத்துக்களை ஆட்சியர் தெரிவிக்க வேண்டுமென கேட்டு கொண்டார் .

நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம் என்று கூறிய முதல்வர் அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை கேட்பதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

* அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை எற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

உயர்நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்குக்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்கக் கோரியிருந்தார் ராஜேந்திர பாலாஜி.

* சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின் - பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.

கர்நாடகா, பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமின் - பெங்களூரு ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு.

ஏப்ரல் 16ஆம் தேதி சசிகலா மற்றும் இளவரசி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு.

* நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் - நீதிமன்றம்.

திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் - நீதிமன்றம்.

மூன்று வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுள்ளதால் இன்று புழல் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு.

* தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆடுதுறை பேரூராட்சிக்கு வரும் 26 ம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன்.

புதிய அரசு தொடங்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்க ஆளுநர் அறிவுறுத்தல் - சரண்ஜித் சிங் சன்னி.

* ஏப்ரல் 26 முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான 2ம் கட்ட பொதுத்தேர்வுகள் தொடக்கம் - சிபிஎஸ்இ.

* காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயார்-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

காங்கிரஸ் விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

* பஞ்சாப் முதல்வர் 16ஆம் தேதி பதவியேற்பு:

பஞ்சாப் முதலமைச்சராக, பகவந்த் மான் வருகிற 16ஆம் தேதி பதவியேற்கிறார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பகவந்த் மான், பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு.

* புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, Paytm payment Bank-க்கு தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

Paytm Payment Bank-ன் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நிபுணரை நியமிக்கவும் ஆணை.

* ஆர்பிஎல் பேங்க் எச்சரிக்கை ⚠️
ஆர்பிஎல் பேங்க்கிலிருந்து வரும் OTP எப்போதும் விற்பனையாளர் பெயர் & பரிவர்த்தனைத் தொகையைக் கொண்டிருக்கும்.

உங்கள் OTP அல்லது அட்டை விவரங்களை ஒருபோதும் யாருடனும் பகிரவேண்டாம்.

உங்களிடம் பகிரும்படி யாராவது கேட்டால், 📞 +91-22-6232-7777 என்ற எண்ணில் எங்களிடம் புகாரளிக்கவும்

💥 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தவறுதலாக ஏவுகணை விழுந்ததாக இந்தியா அரசு அறிக்கை

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தவறுதலாக ஏவுகணை விழுந்ததாக இந்தியா அரசு அறிக்கை.

இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது; இதனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதி அளிக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது- இந்திய அரசு.

* 4 சொடுக்குகளில் தனிநபர் கடன்கள் வழங்கப்படும் என வெவ்வேறு வாடிக்கையாளர் பெயர்களை குறிப்பிட்டு இன்று காலை SBI Lite செயலியில் இருந்து அனுப்பப்பட்ட notificationகள் குறித்து SBI விளக்கம்

நுட்பியல் கோளாறு காரணமாக நிகழ்ந்த தவறை சரி செய்து வருகிறோம் - SBI

* சீனாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா.

சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 255 பேர் பலி -தீவிர ஊரடங்கு அமல்.

ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,194 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages