அக்னிப்புரட்சி இன்றைய (12.03.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் 128வது நாளாக விலைமாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43-க்கும் விற்பனை.
* புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.
மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் நீதிமன்றங்கள் தொடக்கம்.
* நாடு திரும்பிய மாணவர்களை வரவேற்ற முதல்வர்.
உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக மாணவர்களின் கடைசி குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்.
* 2 ஆண்டுகளுக்கு பின் நேற்று கொரோனா பூஜ்ஜிய மரணம் பதிவாகியுள்ளது.
சீனாவின் ஒரு நகரில் மீண்டும் ஊரடங்கு என்பதை மனதில் முன்னிறுத்தி மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் - ராதாகிருஷ்ணன்.
* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) மீதான வட்டி விகிதம் 8.50%ல் இருந்து 8.10% ஆக குறைப்பு.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டிவிகிதம் நடப்பு நிதியாண்டில் குறைக்கப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிரா போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும்.
மத மோத தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும்.
குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு நிறைவு.
மாநாட்டில் பங்கேற்ற அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய உணவு அருந்தினார்.
* நீட் முதுநிலை தேர்வுக்கான கட்-ஆப் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைப்பு.
பொதுப் பிரிவினருக்கு 35%, பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30%,
OBC, SC, ST பிரிவினருக்கு 25% ஆக குறைப்பு - பொது சுகாதார சேவை இயக்ககம்.
* கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் மாணவருக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
காஞ்சிபுரம் தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசின் உதவித்தொகை கிடைத்தபோதும், தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாணவர் வழக்கு.
* காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது.
5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு கூடுகிறது.
* மத்தியபிரதேசம் ஜபல்பூர் விமானநிலையத்தில் அதிர்ஷ்டவசமாக விமான விபத்து தவிர்ப்பு.
டெல்லியில் இருந்து 55 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையை விட்டு விலகியது.
* இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் - இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்
அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் - 92, பண்ட் - 39, விஹாரி - 31, கோலி - 23 ரன்கள் எடுத்தனர்
* 62 பதவியிடங்களுக்க்கு மார்ச் 26-ம் தேதி மறைமுகத் தேர்தல்.
62 பதவியிடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறம் - மாநில தேர்தல் ஆணையம்.
சாதாரண மறைமுகத் தேர்தலின் போது பல்வேறு காரணங்களால் தேர்தல் நடக்காமல் இருந்த 62 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மார்ச் 26-ல் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறும்.
நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் காலையிலும், துணைத் தலைவருக்கான தேர்தல் பிற்பகலும் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்.
No comments:
Post a Comment