அக்னிப்புரட்சி இன்றைய (15.03.2022) முக்கிய செய்திகள்.
* முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நண்பகல் 12 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது.
நீட் விலக்கு மசோதா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக தகவல்.
* முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
கோவை மைல்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை.
* முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு.
சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
கோவையில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2015-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை
58 கோடியே 23 லட்ச ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
வருமானத்தை விட 3928% சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு.
* திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழி திருத் தேரோட்டம் துவங்கியது.
ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரம் 360 டன் எடை கொண்டது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று காலை 8.10 மணிக்கு ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. 2,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
* வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவு தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறும்.
FMG தேர்வு எழுத ஏப்ரல் 4ம் தே
வரை nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், ஜூன் 30ல் முடிவுகள் அறிவிப்பு-மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம்.
* கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணையை உறுதி செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்
அரசாணைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல- கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
மாணவர்களின் வேலை என்பது படிப்பதுதான். எனவே, இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும்- ஹிஜாப் தீர்ப்பை வரவேற்ற மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
கர்நாடக அரசின் ஹிஜாப் தடை அரசாணை செல்லும்;எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
* திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழி திருத் தேரோட்டம் துவங்கியது.
ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரம் 360 டன் எடை கொண்டது.
Video: https://twitter.com/IndiaNewsDigest/status/1503607344164642816?t=hj_rQPagGi-uNedeItHYhg&s=19
* தொடர்ந்து வீழ்ச்சியில் தங்கம் விலை; 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.38,952-க்கு விற்பனை!
* மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம்.
* ஹைதராபாத் படப்பிடிப்பிலிருந்த நடிகர் ஜோசப் விஜயுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு , ஒன்றரை மணி நேரம் நடந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்!
* திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் வேலுமணி சிறிதும் தொய்வடைந்துவிடமாட்டார்;
திமுக அரசின் தீய முயற்சிகளை முறியடித்து, சோதனைகள் அனைத்தையும் வென்று தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அதிமுக விளங்குகிறது, இனியும் விளங்கும்- ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை.
* சாம்சங் நிறுவனத்தின் ₹1588 கோடி முதலீட்டில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
* இந்தியாவில் மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு 20% பங்கு வகிக்கிறது, அதனாலேயே இத்துறை வளர்ந்து வரும் துறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் உற்பத்தி திட்டத்தினை நிறுவிட இந்த நேரத்தில் சாம்சங் நிறுவனம் முன்வர வேண்டும்.
தமிழகத்தில் சாம்சங் நிறுவனம் முதலீடு செய்வதால் இவர்களுக்கு தனி வளர்ச்சி என நான் நினைக்கவில்லை.
இதனால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது.
சாம்சங் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
* தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்
https://twitter.com/IndiaNewsDigest/status/1503612589276024832?s=19
* சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
* திருவண்ணாமலை : 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
* தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றவேண்டும்.
தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் - நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு.
* கடந்த 9 ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை பராமரிப்பு பணியின் போது, தவறுதலாக சீறிப்பாய்ந்தது.
பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
* ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்க வலியுறுத்தினார்.
அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்- தமிழ்நாடு அரசு.
* ஜாமினில் விடுதலையானார் பேரறிவாளன்:
பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
புழல் சிறையில் இன்று ஆஜராகி சட்ட நடைமுறைகளுக்கு பின் ஜாமினில் வெளிவந்தார் பேரறிவாளன்.
* மீண்டும் மீண்டும் மிரட்டும் கொரோனா:
சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு 5,280 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
கொரோனா தொற்று அதிகரித்து உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
* உக்ரைனில் இருந்து 22 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம்.
கடும் சவால்களுக்கு மத்தியில் மாணவர்களை தாயகம் அழைத்து வந்துள்ளோம்-மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.
போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை மீட்பது சாத்தியமானது.
இந்தியர்கள் மட்டுமன்றி, பிற வெளிநாட்டினரையும் உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம்.
பெரும்பாலான மாணவர்கள் உக்ரைனிலேயே தங்கியிருக்க முடிவு செய்திருந்தனர்.
படிப்பை பாதியில் விட்டு தாயகம் திரும்ப மாணவர்கள் தயக்கம் காட்டினர் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
உக்ரைனில் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சவால்களை எதிர்கொண்டு, மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்துள்ளோம்.
உக்ரைனில் இறந்த நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை - ஜெய்சங்கர்.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய அரசு நடவடிக்கை.
மாணவர்களின் கல்வி தொடர்பாக, முழு பொறுப்புடன் அரசு அணுகும் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
* உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் - முதல்வர் சந்திரசேகர் ராவ்.
சுமார் 700 மருத்துவ மாணவர்கள் தெலுங்கானாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் - சந்திரசேகர் ராவ்.
* ஹிஜாப் விவகாரம் தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீடு.
* எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு.
59 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.84 லட்சம் மற்றும் ஆவணங்களும் பறிமுதல்.
செல்போன்கள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவையும் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை.
கிரிப்டோகரன்சிகளில் எஸ்.பி.வேலுமணி முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
கிரிப்டோகரன்சியில் ரூ.34 லட்சம் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை.
No comments:
Post a Comment