மேற்கு மாவட்டங்களின் பா.ம.க. நிர்வாகிகளுடன் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா ஆலோசனை - Agnipuratchi

மேற்கு மாவட்டங்களின் பா.ம.க. நிர்வாகிகளுடன் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா ஆலோசனை

Share This

மேற்கு மாவட்டங்களின் பா.ம.க.  நிர்வாகிகளுடன் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா ஆலோசனை

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும்  மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  மருத்துவர் அய்யா அவர்கள்  கடந்த சில வாரங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைநகர் சென்னை, வடக்கு மாவட்டங்கள், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன்  மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். இதுவரை மொத்தம் 6 நாட்கள் ஆலோசனை நடைபெற்றுள்ள நிலையில், இன்று ஏழாவது நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தைலாபுரம் தோட்டத்தில்  நடைபெற்ற இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி,  தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி,  தேர்தல் பணி செயலாளர் செல்வக்குமார்,  கோவை மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் ராஜகோபால், ரவிச்சந்திரன், இரா.பழனிச்சாமி ரமேஷ், மாவட்ட தலைவர்கள்  சரவணன், சிங்கார வேலு,  ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்  செங்கோட்டையன்,  நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட  மாவட்ட செயலாளர்கள் தினேஷ் பாண்டியன்,  பி.கே.செந்தில், வேல்முருகன், மாவட்ட தலைவர்கள் ராமநாதன், சீனிவாசன், செந்தில்,  கரூர் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர் பிரேம்நாத், தலைவர் சரவணக்குமார், நீலகிரி மாவட்ட செயலாளர் குணசேகரன், தலைவர் அம்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages