அக்னிப்புரட்சி இன்றைய (16.03.2022) முக்கிய செய்திகள்.
* 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி.
12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் இன்று தொடங்குகிறது.
60 வயதை கடந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் மீது தனிமனித பொருளாதார தடைகளை விதித்து ரஷ்யா உத்தரவு.
* பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் (2022) முதல்முறையாக இந்தியாவில்... சென்னையில் நடைபெறுகிறது....
2022 ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி, ரஷ்யாவில் நடைபெறவிருந்த நிலையில் இந்தியாவின் சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போட்டி ரஷ்யாவில் ரத்து செய்யப்பட்டது.
* ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
போட்டிகளில் பங்கேற்க வரும் உலக செஸ் வீரர்களை வரவேற்பதாகவும் முதலமைச்சர் ட்விட்டரில் பதிவு.
* தேர்தல் தோல்வி எதிரொலியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில தலைவர்கள் ராஜினாமா செய்ய அக்கட்சி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
* சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூ 139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது.
மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி.
நீர்நிலை மற்றும் நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் நடைபெற கூடாது என நிபந்தனை.
* சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம் அனுமதி.
தமிழக அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி.
* நெல்லையில் ரவுடி சுட்டுக் கொலை.
நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர்.
நாங்குநேரியில் திண்டுக்கல் தனிப்படை போலீசாரால் ரவுடி முருகன் என்கவுன்ட்டர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நீராவி முருகன் மீது 3 கொலை உள்பட 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலான் கிராமத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அரவிந்த் ஜெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே பகவந்த் மான் தனது பதவியேற்பு விழா இடத்தை தெரிவித்தார்.
* சென்னை அண்ணாநகரில் உள்ள வங்கி மற்றும் குடியிருப்பு பகுதியில் தீவிபத்து
Video: https://twitter.com/IndiaNewsDigest/status/1504041410919813125?t=iAQVg34ftN2KiBrHOGWXmA&s=19
* மாநிலம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் - தமிழக அரசு.
தமிழ்நாடு அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மனு தாக்கல்.
* போயஸ் இல்லத்திற்காக அரசு செலுத்திய ரூ.68 கோடி வைப்பு தொகை வட்டியுடன் மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அளிப்பு
போயஸ் இல்லத்தை அரசுடமையாக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 2020ல் ரூ.68 கோடியை டெபாசிட் செய்தது
வேதா நிலைய இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என அரசின் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.
* ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 297 கி.மீ தொலைவில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு.
ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக புகுஷிமா மற்றும் மியாகி நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* உக்ரைனில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டுமென பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு.
ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளோம்.
ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருத்து.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும்; உத்தரவை புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் - செலன்ஸ்கி.
No comments:
Post a Comment