அக்னிப்புரட்சி இன்றைய (17.03.2022) முக்கிய செய்திகள்.
* கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம்.
* கருங்கடலில் இருந்த தங்களது நாட்டைச் சேர்ந்த 3 கப்பல்கள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளதாக பணாமா நாட்டு அரசு தகவல்.
அதில் ஒரு கப்பல் மூழ்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் - மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.
* முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.ஹெச்.டி. படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகமாகின்றன.
4 ஆண்டு UG படித்தால் PG படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேருவதற்கான படிப்பை UGC அறிமுகப்படுத்துகிறது.
ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால யுஜி படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால யுஜி படிப்பும் அறிமுகமாகிறது.
* கொரோனா தொற்றை உறுதி செய்யும் RT - PCR பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு - தமிழ்நாடு அரசு.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா உறுதிபடுத்தும் RT-PCR பரிசோதனைக்கான கட்டணம் ரூ.400 லிருந்து 250 ஆக குறைப்பு.
முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்கள் தனியார் ஆய்வுக்கூடங்களில் RT-PCR பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.700 லிருந்து ரூ.400 ஆக குறைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு.
* 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500 லிருந்து ரூ.2,000ஆக உயர்வு
2,15,505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்த்த ரூ.31.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
* 17 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐ.ஜி. பதவியிலிருந்து ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு
தென்மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்
வடக்கு மண்டல ஐ.ஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
* சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது - ரஷ்யா திட்டவட்டம்.
உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ்வில் குடியிருப்புகள் மீது இன்றும் தாக்குதலை நடத்தி வருகிறது.
* உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் 1 பில்லியன் டாலர் கடனுதவி.
* தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் சென்னையிலிருந்து பயணத்தை தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்- மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மார்ச் 25 ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதியிலிருந்து மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
* ஈரோடு, மதுரை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று 100 பாரன் ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி உள்ளது.
➤ஈரோடு - 103
➤மதுரை - 102
➤சேலம் - 100
No comments:
Post a Comment