அக்னிப்புரட்சி இன்றைய (19.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.03.2022) முக்கிய செய்திகள்.

* தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் இன்று (மார்ச் 19) பணிக்கு வர வேண்டும் -கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

* வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை.

* தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி இன்று 25வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயது உடையவர்களுக்கு 3.61 லட்சம் பேருக்கும், 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு 28.25 லட்சம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* அந்தமான், நிகோபா் தீவுகளின் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது

* வேளாண் பட்ஜெட் உரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தொடங்கினார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்.

உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன்-வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்.

46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது; 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ₹5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவில் உணரப்படுகிறது; தமிழ்நாட்டுக்கு இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்; இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை.

பருவமழையால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை;

இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை.

இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி நிலை அறிக்கை ஒடுகிற குழந்தையாய் இருக்கும்.

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது

புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது

காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும்.

சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளின் வருமானதை அதிகரிக்க மாநில வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இயற்கை வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

3204 கிராம பஞ்சாயத்துகளில் ₹300 கோடி மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரகவளர்ச்சி துறையுடன் இணைந்து வேளாண்துறை பாடுபடும் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்.

விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ₹300 கோடி ஒதுக்கீடு.

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₹71 கோடி நிதி ஒதுக்கீடு.

60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ₹1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு.

3,204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

2020-2021ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,055 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

150 வேளாண் தொகுப்புகளை 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ₹5 கோடி மத்திய அரசு - மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்.

நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.

முதலமைச்சர் தலைமையில் சிறுதாணிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும்.

சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

நடப்பாண்டில் நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்-அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்.

சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு.

தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு.

சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

வேளாண்துறையில் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை.

நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்-  வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு மையம் மூலம் 30,000 மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், தேக்கு போன்ற மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும்.

பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய பயிறு வகைகள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

இத்திட்டம் ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும்; கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950

கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம்.

சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் அமைக்க  ரூ.4.5 கோடி நிதி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின்  கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும்.

சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் ரூ.32.48 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்; சூரியகாந்தி சாகுபடி பரப்பு உற்பத்தித் திறன் உயர்த்தப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை-வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.

ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்.

கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை, பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி.

தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ₹27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்.

தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ₹8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி ஒதுக்கீடு.

திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ₹381 கோடி ஒதுக்கீடு.

தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்படும்.

₹8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி.

முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.65.34 கோடி நிதி.

145 சூரிய சக்தி உலர்த்திகளுக்கு ரூ.3 கோடி.

அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ₹5 கோடி ஒதுக்கீடு.

பனை மர வளர்ச்சியை ஊக்குப்படுத்த ரூ.10 லட்சம் விதைகள் விநியோகம் செய்யப்படும்.

ரூ.2.65 கோடி செலவில் பனை ஓலை தயாரிக்க பயிற்சியும் மானியமும் வழங்கப்படும்.

கைபேசியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள்

பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும்  திட்டம் ₹5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும்.

அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.

“இனி மாலையிலும் உழவர் சந்தை" -வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.

மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு.

உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை.

ரூ.10 கோடியில் 10 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.

50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் "தமிழ் மண் வளம்" என்ற இணையதளம் உருவாக்கப்படும்.

மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் துவக்கப்படும்.

பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு 25 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்; சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும்.

வேளாண்மை,அதுசார்ந்த பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, 2022-23ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க  ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

* சென்னையில் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக 'நம்ம ஊரு திருவிழா'

சென்னை தீவுத்திடலில் வரும் 21ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்படுகிறது.

* பிரதமர் மோடியை தூக்கிலிட வேண்டும் என்று பொது மேடையில் பேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மாநில நிர்வாகி ஜமால் உஸ்மான் கைது தஞ்சை எஸ்.பி நடவடிக்கை.

திருக்கானூர்பட்டி பகுதியில் ஜமால் உஸ்மானை போலீசார் கைது செய்தனர்.

* இது வேளாண் பட்ஜெட் அல்ல, கொள்கை விளக்க குறிப்பில் உள்ளதை வாசித்துள்ளனர். இது விவசாயிகளை ஏமாற்றும் அறிக்கை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

வேளாண் பட்ஜெட்டுக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை;

அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

* மார்ச் 31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேரின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.

* வேளாண்  பட்ஜெட்டை பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்;

பட்ஜெட்டை பாமக சார்பில் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம்.

புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்
- பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி.

* விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்த தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையினை வரவேற்கிறோம்

கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம், பனை வெல்லம் உற்பத்திக்கு ஊக்கம், சூரிய ஒளி பம்பு செட், இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை வரவேற்கிறோம்

விவசாயத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ள விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாதது வருத்தமளிக்கிறது - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை

* விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது;

மாநிலத்தை மட்டும் அல்ல மண்ணையும் காக்கும் அறிக்கையாக வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் கைது.

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் சுப்பையா கைது.

2020ம் ஆண்டு அடுக்குமாடு குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டி வீடு வாசலில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.   

* 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார்.

இந்தியா - ஜப்பான்  வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இந்தியா இந்தியா வந்துள்ளார் ஜப்பான் பிரதமர்.

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் மோடியையும் சந்தித்து பேசவுள்ளார்.

* தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.

வேளாண்மைக்கென மொத்தம் ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன - கே.எஸ். அழகிரி வரவேற்பு.

* வேளாண் பட்ஜெட் உழவர் பெருமக்களை ஊக்குவிப்பதாக உள்ளது.

உணவுப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், உழவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது - திருமாவளவன்.

* சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் பகுதிக்கான முடிவுகள் வெளியீடு

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்பட்டது

மாணவர்கள் தங்கள் முடிவுகளை பள்ளிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் - சிபிஎஸ்இ

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages