அக்னிப்புரட்சி இன்றைய (20.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.03.2022) முக்கிய செய்திகள்.

* தமிழ்கம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுமார் 52 லட்சம் பெற்றோர்கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு.

* ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு வருகின்ற 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறும்பட்சத்தில் ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, பான் கார்டு முடக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

* 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வி.

தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த மாணவர்கள் தேர்வில் தோல்வி.

10,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வில் Absent போட்ட அண்ணா பல்கலைக்கழகம்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடைத்தாளை அனுப்பி வைக்காததால், மதிப்பீடு செய்யப்படவில்லை என விளக்கம்.

* சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து.

புயல் எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 22ம் தேதி வரை மூடப்படுவதாலும்,  சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பு.

* பங்குனி உத்திர விழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்; தமிழ்நாடு முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

* தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது!

முதலமைச்சர் கூறியது போல குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பான குற்றம் குறைந்துள்ளது. - டிஜிபி சைலேந்திர பாபு

* சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக நடைபெற்ற மதுவிருந்தில் பங்கேற்ற 50 பெண்கள் உட்பட 500 பேரைப் பிடித்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவுக்கு சொந்தமான (Orchid Resorts) ஆர்ச்சிட் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாகவும் அந்த மது விருந்தில் போதை மருந்து பயன்படுத்துவதாகவும் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் விடிய விடியத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்ட நிலையில் மது விருந்தில் கலந்து கொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர். மேலும் தகவல் அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலாளா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

இதன் பின்னர் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, அங்கு இருந்த இளைஞர்களிடம் இது போல் நடந்து கொள்ளக்கூடாது என்றும் இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்றும் கூறினார். மேலும் இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்குத் தேவைப்படும் stress buster இது அல்ல நல்ல வழியைப் பயன்படுத்துங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

* கடந்த சில ஆண்டுகளில் இசை பல மாற்றங்களை சந்தித்துவிட்டன. வைரல் என்கிறார்கள்... வியூஸ் என்கிறார்கள்... இசையின் வெற்றிக்கு இவைதான் அளவுகோலா?!

என் பாடல்கள 4 தலைமுறைகளாக மக்களால் கொண்டாடப்படுகிறதே... அப்படியென்றால் அது வைரலா அல்லது ஒரு வாரம், 10 நாள் பிரபலமாக இருப்பது வைரலா?

இப்போது இசையமைப்பாளர்களே இல்லை புரோகிராமர்கள்தான் இசைக்கின்றனர்.

புதிய குரல்கள் தினமும் வருகின்றன. ஆனால் எஸ்பிபி போலவும், ஜேசுதாஸ் போலவும் காலத்தைக் கடந்து நிற்கும் குரல்கள் எங்கே? அந்த சகாப்தம் முடிந்துவிட்டது.

புதிய வரவுகள் கூடாது என்பதில்லை. நான் புதியவர்கள் திரைக்கு வருவதை ஊக்குவித்தேன். மணிரத்னம் என்னிடம் வந்தபோது உடனே ஓகே சொன்னேன். காரணம் சினிமாவில் புதியவர்கள் வர வேண்டும் என்று நான் விரும்பினேன்"..
திரைப்பட இசை அமைத்துள்ளார் இளையராஜா

* முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன், வானிலையாளர் (பணி நிறைவு) தரும் வானிலை அறிக்கை, 20.03.2022 காலை 1100 மணி.

தெங்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நன்கமைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று 20.03.2022 அன்று காலை 0530 மணியளவில் எதிர்பார்த்ததுபோல காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் அதற்கடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக்கூடும். இதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகள், மியான்மார் எனப்படும் பர்மா, வங்கதேசம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் மழை பாதிப்பு ஏற்படலாம்.
தமிழகத்தின் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் மேகமூட்டமாகக் காணப்படுகிறது. இருப்பினும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

* அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை' என்பதே அரசின் இலக்கு - வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

பள்ளி, கல்லூரி கல்வியை மேம்படுத்தி விரும்பும் வேலைக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகிறோம்.

ஆட்சிக்கு வந்த பின் 36 பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள், 297 சிறிய முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

41 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, இதில் 513 பேர் மாற்று திறனாளிகள் என்பது பெருமை - முதல்வர்.

* பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் முன்னிலை.

வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருகிறது, எதிர்த்தரப்பினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது-விஷால் அணி  மனோபாலா

* வெற்றி, தோல்வி பற்றி
கவலை இல்லை - நடிகர் பாக்யராஜ்.

பதிவான வாக்குகளை விட அதிக
வாக்குகள் இருக்கின்றன.

கூடுதல் வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையிலும், வாக்கு எண்ணிக்கையை நடத்துகிறார்கள் - நடிகர் பாக்யராஜ்.

* கேரளா: மலப்புரம் மாவட்டம் பூங்கோட்டில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் இடிந்து விழுந்து விபத்து.

இதில் சுமார் 200 பேர் காயம்; 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை தகவல்.

* மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் தாமதமாக பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படும்.

தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் -அமைச்சர் பொன்முடி.

நேரடி தேர்வுகள்தான் நடைபெறும், அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும், அந்த அளவுக்கு அதிகமானோர் அரசு பள்ளிக்கு வருவார்கள்-அமைச்சர் பொன்முடி.

* தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

* விவசாயிகளே பாராட்டும் வேளாண் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா?

திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு என்பது பொய் விமர்சனம். விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக திமுக செயல்படுகிறது.

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம்.

* மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன் சிங் தேர்வு.

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பைரேன் சிங்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரெண் ரிஜ்ஜு பங்கேற்பு.

*'தஞ்சை மாவட்டம் நரசிங்கன்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள சிற்றூரான நரசிங்கன்பேட்டையில் ஆச்சா மரத்தில் செய்யப்படும் நாதஸ்வரம் உலகப் புகழ் பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages