அக்னிப்புரட்சி இன்றைய (22.03.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.03.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.03.2022) முக்கிய செய்திகள்.

* சத்தியமங்கலம் பண்ணாரி
அம்மன் கோயிலில் தீக்குண்டம் திருவிழா.

பண்ணாரி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு.

பண்ணாரி அம்மனுக்கு அக்னி குண்டம்
இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.

* சென்னையில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசு அதிகரித்து ரூ. 102.16-க்கும்,  ஒரு லிட்டர் டீசல் 76 காசு அதிகரித்து ரூ.92.19-க்கும் விற்பனை.

* வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது.

சென்னையில் சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்து ரூ 967-க்கு விற்பனை.

கடந்த சில மாதங்களாக ரூ 917 ஆக இருந்த சிலிண்டர் விலை உயர்ந்தது.

* சென்னை மெரினா காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேருக்கும் ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்.

சாதிக், ஆசிப், ரஹ்மத்துல்லா, முகேஷ், ஹரிஹரன், ரோமன் ஆகிய 6 பேர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைப்பு.

2 சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு.

* மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி - குறைகளை களைய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாத 5,493 பேரின் பிரச்னைகளை களைய வாரிய செயலாளரை தலைவராக கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு.

* விருதுநகரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திமுகவை சேர்ந்த இருவர், நான்கு பள்ளி செல்லும்  சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது.

ஹரிஹரன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காதலிப்பது போல் நடித்து, ஆபாச படம் பிடித்துள்ளார்.

வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரும் அவரது நண்பர்களும் அப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.

* குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்.

விருதுநகரில் பட்டியலினப் பெண்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பதிவு.

* மீண்டும் தமிழகத்தை நோக்கி வரும் இலங்கை தமிழர்கள்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மீண்டும் தனுஷ்கோடிக்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், தனுஷ்கோடி அருகே உள்ள 3ம் மணல் தீடையில் தஞ்சம்.

அடுத்த சில நாட்களில் 2000 பேர் தமிழகம் வருவதற்கு தயராகி வருகின்றனர்.

* கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

* தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

* அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்று கூறுவது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் - செல்லூர் ராஜூ எம்எல்ஏ.

போக்குவரத்துக் கழகம் ரூ. 48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் வழங்க இயலவில்லை.

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை எவ்வாறு நடத்துவது; சாதாரண கட்டண நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்.

* ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.

அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றி ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது; இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது - எடப்பாடி பழனிசாமி

* ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு மாற்றுக்கருத்து இல்லை - அமைச்சர் ரகுபதி.

* பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி; பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு.

* திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதாதான் - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்.

இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் - ஓ.பி.எஸ்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்தார்.

இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன், பொது வெளியில் எங்கும் பேசவில்லை.

அரசுப்பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எவ்வித தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது.

ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்.

ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் ஓபிஎஸ்தான் முதலமைச்சர், அவரது பெயரைத்தான் முன்மொழிய வேண்டும் என நத்தம் விஸ்வநாதனுக்கு தனது பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்த நேரத்தில் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தேன்;

அப்போது, அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும். சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என ஜெயலலிதா கூறினார்- விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் வாக்குமூலம்.

* முன்னாள் சபாநாயகர் தனபால் பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களை வரவேற்றுள்ளார் அதற்கு நன்றி.

அதில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

அவர்கள் கூறிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தி விட்டால் அடுத்த 60 கிலோமீட்டர் தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது.

60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூன்று மாதங்களில் அகற்றப்படும்-நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.

* மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும்- சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.

வேலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது; ஆனால் அதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியது- முதல்வர்.

* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்?

உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது, ஜாமீன் கோரி நளினி உச்சநீதிமன்றத்தை  தான் அணுக முடியும்-சென்னை உயர்நீதிமன்றம்.

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி சுகுணா சிங், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இடமாற்றம்;

நவீனமயமாக்கல் ஏஐஜி என்.எஸ்.நிஷா, மயிலாடுதுறை எஸ்.பி.யாக நியமனம்.

* விருதுநகரைச் சேர்ந்த ஜுனைத் அகமது, கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் தற்காலிக நீக்கம்-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

பாலியல் புகாரில் கைதானதைத் தொடர்ந்து நடவடிக்கை.

* அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் உத்தரவு- டிஜிபி சைலேந்திரபாபு.

விருதுநகர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

புலன் விசாரணை மேற்கொள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா மற்றும் சரக துணைத்தலைவர் பொன்னி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages