அக்னிப்புரட்சி இன்றைய (23.03.2013) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.03.2013) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.03.2013) முக்கிய செய்திகள்.

* பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக இன்றும் உயர்வு:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.91-க்கும், டீசல் ரூ. 92.95-க்கும் விற்பனை.

பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளும் அதிகரிப்பு.

* பீகார் மாநில  முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

* உடுமலை நகராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திமுக நகர செயலாளர் மத்தீன் கட்சியின் நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்

* உலகத் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள 25 வயதான ஆஸ்திரேலிய  டென்னிஸ் வீராங்கனை ஆஷ் பார்ட்டி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி 3 கிராண்ட்ஸ்டாம் பட்டங்களை வென்றுள்ளார்.

ஆஷ்லே பார்டி 25 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி.

* இராமநாதபுரம் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்தில் 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் இணைப்பு.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க ரோந்து பணியில் இந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபடும்.

* உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கில் கேரள அரசின் பதிலுக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு.

பராமரிப்பு பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுக்கிறது; சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை - தமிழ்நாடு அரசு.

அணை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது; அணை பாதுகாப்பாகவே உள்ளது.

ஆய்வு செய்ய சர்வதேச குழு தேவையில்லை. ஒன்றிய நீர்வள ஆணையத்தின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு அரசின் குழுதான் அணையை ஆய்வு செய்யும் - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்.

* கும்பகோணம் தொகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியருக்கான விடுதியில் கல்லூரி மாணவியரும் தங்கி படிக்க அரசு அனுமதிக்க வேண்டும் - கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன்.

* கல்லூரி மாணவியரை, பள்ளி மாணவியருடன் சேர்த்து தங்க வைத்தால் சிக்கல் ஏற்படும்.

தேவைப்பட்டால் கூடுதல் கட்டடத்தில் கல்லூரி மாணவியரை தங்க வைக்க முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்.

* தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் பாமகவை சேர்ந்த வன்னியர் சங்கம் மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் வெற்றி.

திமுக மற்றும் திமுக ஆதரவு உறுப்பினர்கள் தேர்தல் புறக்கணிப்பு.

* மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு.

பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு.

* பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2 வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி - பிற்பகல் வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு.

* பி.இ வகுப்புகளை நடப்பு கல்வி ஆண்டிலும் நேரடி மற்றும் ஆன்-லைன் வழியில் நடத்திக்கொள்ளலாம்
- அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி.

முதலாம் அண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்க உத்தரவு.

இதுவரை 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- முதலமைச்சர் ஸ்டாலின்.

* திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்- சட்டப்பேரவையில் 110  விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.

கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு, அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை,

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்ற 5 -ல் முதல் 4 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது - முதலமைச்சர்.

வேளாண்மைக்காக தனி பட்ஜெட், நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கொரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணம்;

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு போன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

3-ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பேருந்துகளில் இலவச பயணம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு 5 லட்சம் வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசாணை வெளியிடப்பட்டு முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்படுவதை அரசு கண்காணித்து வருகிறது.

தேர்தல் அறிக்கையில் இல்லாதவை கொள்கை அறிவிப்புகளாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன.

ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச செல்போன், பொது இடங்களில் இலவச வைபை வசதி திட்டம் செயல்படுத்தப்படவில்லை  - சட்டப்பேரவையில் முதலமைச்சர்

* விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றம் -முதலமைச்சர் அறிவிப்பு.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், தற்போதைய ஆட்சியில் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை பெற்று தருவோம் என்பதை அனைவரும் பாருங்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் சூளுரை.

விருதுநகர் பாலியல் விவகாரத்தில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல், இந்த வழக்கு வேகப்படுத்தப்படும்.

தவறிழைப்போருக்கு பாடமாகவும், விரைந்து தண்டனை பெற்றுத்தருவதில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாகவும் இந்த வழக்கு இருக்கப்போகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனையை வழங்கி உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது; அதற்கு முற்றுப்புள்ளி தேவை - ஈபிஎஸ்.

* அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் மார்ச் 31 முதல் முடிவுக்கு கொண்டுவர மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி விதிமுறைகள் தொடரும் எனவும் தகவல். 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது

* மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் தீப்பெட்டி பண்டல் விலை ₹300ல் இருந்து ₹350 ஆக உயர்கிறது - கோவில்பட்டியில் நடந்த தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கூட்டத்தில் முடிவு.

எனினும், சில்லரையில் விற்கப்படும்  தீப்பெட்டி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

* தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டத்தை நிறுத்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

* பிறகு கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தீர்கள்?- அமைச்சர் துரைமுருகன்.

* தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவைக்கவில்லை;
ஒப்பந்தபுள்ளி கோருவதில் காலதாமதமானதால், திட்டத்தை 4 ஆண்டுகளாக செயல்படுத்த முடியவில்லை- ஓ.பன்னீர்செல்வம்.

* ஒப்பந்தபுள்ளிக்கு 4 ஆண்டுகளா? அப்படி என்ன ஒப்பந்தப்புள்ளி அது?"- அமைச்சர் துரைமுருகன்.

* தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான்- ஓ.பன்னீர்செல்வம்.

* அதிமுக தொடங்கிய திட்டங்களை திமுக நிறுத்துவது போன்ற போலித் தோற்றத்தை உருவாக்க ஓபிஎஸ் முயல்கிறார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசியல் காழ்புணர்ச்சியால் திட்டங்களை முடக்கியது அதிமுகதான்.
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழ் படுத்தியது யார்?

ராணி மேரி கல்லூரியை அப்புறப்படுத்த முயன்றது யார்?

உழவர் சந்தைகளை மூடியது யார்?

உடன்குடி மின் திட்டத்தை நிறுத்தியது யார் ?

பாடப்புத்தகத்தில் கருணாநிதி பெயரை ஸ்டிக்கர் ஒட்டியது யார்?,

இதை சொல்வதால் பழிவாங்குகிறோம் என்பதில்லை,  நல்ல திட்டங்களை தொடருவதுதான் திமுக ஆட்சி

-ஓபிஎஸ்ஸுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சராமாரி கேள்வி

* மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர்; கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி.

விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

* பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கு.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

* புதுக்கோட்டை, மழையூர் அரசு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என புகார்.

மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.

* மதுரை சிறைக்குள் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகம் என புகார்.

கைதிகள் 7 பேருக்கு செல்போன், கஞ்சா வழங்கி உதவியதாக இரு காவலர்கள் பணிநீக்கம்.

* ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.

இருவரும் ஏற்கனவே முன் ஜாமின் பெற்றிருந்த நிலையில் ஜாமின் வழங்கி உத்தரவு.

* அந்தமான் நிகோபார் தீவில் நடத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

நிலத்திலிருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை நிலத்திலுள்ள குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.

* கோவை வருமான வரி துறை அலுவலகத்தில் பணிபுரியும் துணை ஆணையர் டேனியல் ராஜ், ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.

2017ம் ஆண்டு வருமான வரி சோதனையில் சிக்கிய நபருக்கு சாதகமாக செயல்படுவதற்கு, ரூ.2.50 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இருவரும் கைது.

* 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம்.

வரும் 28 முதல் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வுத்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages