விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க
நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனையை நிறைவு செய்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், அடுத்தக்கட்டமாக மாவட்ட த்தில் உள்ள மற்ற நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
முதற்கட்டமாக திண்டிவனம், வானூர் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தைலாபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment