அக்னிப்புரட்சி குழுமத்தின் சார்பாக செய்தியாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
அக்னிப்புரட்சி பத்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்னிப் புரட்சி இதழ் மென்மேலும் வளர செய்தியாளர் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை தி.நகர் பாமக அலுவலகத்தில் அக்னிப்புரட்சி ஆசிரியர் த.நாராயணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் ஜி கே மணி அவர்கள் நேரில் கலந்து கொள்ள முடியாததால் வீடியோ கால் மூலமாக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார் மற்றும் மூத்த பத்திரிகையாளரும் நீதியின் குரல் நிறுவனர் மற்றும் ஆசிரியர் C.R. பாஸ்கரன், சமூக முன்னேற்ற சங்கம் வடக்கு மண்டல பொறுப்பாளர் சிறப்பு ஆசிரியர் பூவை S.S.குமரன் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். அக்னிப்புரட்சி இதழில் சிறப்பாக செயல்பட்டதற்கு சிறப்பு ஆசிரியர் பூவை S.S.குமரன், செய்தியாளர்கள் ம. தயாளன், எம்.சேதுபதி மற்றும் ஆர்.எஸ். மணி அவர்களுக்கு சி.ஆர்.பாஸ்கர் அவர்கள் சிறப்பு பரிசாக பேனாவை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை ஆசிரியர்கள் ஸ்ரீராம் ஐயர், திருவேற்காடு சு.செல்வகுமார், ஆற்காடு செல்வம், பழனி அ.வைரமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் மணிவண்ணன், பாக்யராஜ், கோபி, கார்மேகம், பாலாஜி நந்தகுமார் விமல் ஆதித்யன், பிரகாஷ், லோகநாதன், கோடீஸ்வரன் சதீஷ் ஜெசிதா, ஜெயந்தி, ராமு, சகாதேவன், கங்காதரன், சுபாஷ் பாஸ்கர், கலையரசன், பாலாஜி, விளம்பர மேலாளர் கலை பிரபு, நிர்வாக ஆசிரியர் நிர்மலா நாராயணசாமி, நெட்வொர்க் ஆபரேட்டர் பிரசாந்த், பொறுப்பாசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் அக்னிப்புரட்சி இதழ் பத்தாம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதற்காக மருத்துவர் அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஒப்புதலோடு இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment