தென்மாவட்ட பாமக நிர்வாகிகளுடன்
நிறுவனர் மருத்துவர் அய்யா ஆலோசனை
பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்.
தையலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா, தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் திலிப்குமார், உமாநாத், பிரின்ஸ், ராகவன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் சக்தி செல்வம், சுப. பெரியசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் ஹக்கிம், அஜித், சிவகங்கை மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், தேனி மாவட்டச் செயலாளர் திருப்பதி, மாவட்டத் தலைவர் காமராஜ், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் தங்கராஜ், அன்பழகன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் இசக்கி முத்து, சீதாராமன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் ஜான் கென்னடி, சிவக்குமார், ஜோதி முத்து, மாவட்டத் தலைவர் வைரமுத்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் அழகர்சாமி, செல்வம், கிட்டு, செல்வக்குமார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் டேனியல், சண்முக வேலுச்சாமி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் சின்னத்துரை, பரமகுரு, ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கில்மன், அலெக்சாண்டர் ராஜ்குமார், மருத்துவர் சாஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இந்தக் கூட்டத்தின் போது மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment