அக்னிப்புரட்சி இன்றைய (07.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.04.2022) முக்கிய செய்திகள்.

* டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து.

ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் டெல்லி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

* JEE Main தேர்வு தேதி மாற்றம்:
முதற்கட்ட JEE Main தேர்வு ஜூன் 20 முதல் 29 வரையிலும், 2ம் கட்ட JEE Main தேர்வு ஜூலை 21 முதல் 30 வரையிலும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

* சென்னையில் இன்று பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா!. புதிய அமைச்சர்கள் வரும் 11ம் தேதி பதவியேற்கின்றனர்

* மாஸ்க் அணிவது குறித்து மக்களிடையே தவறான புரிதல் உள்ளது, பொதுஇடத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர்

* கொரோனா உறுதியான மாதிரிகளை  சோதனை செய்ததில் இதுவரை #XE Variant Corona தமிழகத்தில் உறுதியாகவில்லை. பொதுமக்கள் வீண் பதற்றமடைய வேண்டாம்
- சுகாதாரத்துறை செயலாளர்

* தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டில்லிக்கு பயணம். பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே டில்லியில் உள்ளார்

* வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு, அது செயல்பாட்டில் இருக்க வேண்டும்;

காவலர் பணியில் இருக்க வேண்டும் ; இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும்- தேர்வுத்துறை.

* நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடியில் கட்டப்பட்ட 9 பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

6 ரயில்வே பாலங்கள், ஒரு ரயில்வே கீழ் பாலம், ஆற்றுப்பாலம், ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது.

* மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தல்.

* சென்னை கே.கே.நகரில் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட்.

குமரன் நகர் தலைமைக்காவலர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் நடவடிக்கை.

* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே நிறைவு

* சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம்.

வழிகாட்டு குழு துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம்.

மேயர் பிரியா ராஜன், எம்.எல்.ஏ. எழிலன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் உள்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்குவதாக குற்றச்சாட்டு.

* கடலூர் - பாரதிசாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

‘பீஸ்ட்' படத்துக்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி மறுக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம்

* 7 பேர் விடுதலை - ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் - தமிழக அரசு.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் ஆவணங்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28  அறிவிப்புகளை  வெளியிட்டார் அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன். 

குக்கிராமங்களைப்  பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன்  இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் 1346 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் 431.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

ஊரகப் பகுதிகளில் 1261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

தமிழகத்தின் மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும்,381.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 இலட்சம் பனை விதைகள் மற்றும் 69 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்.

ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்.

* மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மர நடை பாதை அமைக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு.

சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்; தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை.

சென்னையில் ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.261 கோடி மதிப்பில் கூட்டுத் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
ரூ.302.5 கோடியில் 24 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

ரூ.98 கோடியில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மேம்பாலம் அமைக்கப்படும்.

சென்னை, மதுரை, கோவையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.

* உதவி காவல் ஆய்வாளர் பதவி தேர்வுக்கான விண்ணப்பிக்க கால அவகாசம் 10 நாட்கள் நீட்டிப்பு.

ஏப்.17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தகவல்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடைசி தேதியான இன்று மொத்தமாக விண்ணப்பிக்கப்பட்டதால்  சர்வர் சரிவர இயங்கவில்லை.

* 2022 - 2023-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு வரும் 20 முதல் மே 18 வரை rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு.

மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவு.

* நீட் தேர்வு கட்டணம் உயர்வு : கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்வு

பொதுப்பிரிவினருக்கான ரூ.1,500 லிருந்து ரூ.1,600 ஆக உயர்வு

EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு

பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800-லிருந்து ரூ.900 ஆக உயர்வு

வெளிநாடு வாழ் இந்தியர்களில் அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் ரூ.8,500 ஆக நிர்ணயம்.

* பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு மீது வரும் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னதாக கடந்த ஞாயிறன்று பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages