அக்னிப்புரட்சி இன்றைய (11.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.04.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 5வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை.

* நேற்று நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் Emmanuel Macron(28.1%) மற்றும் Marine Le Pen (23.3%) ஆகியோர் விருப்பத்திற்குரிய வேட்பாளர்களாக தேர்வு.

அதிபர் தேர்தலில் 12 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 24-ல் நடைபெற உள்ள இறுதி சுற்றுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.

* தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு!
https://youtu.be/wiHcBjoR5Zg

* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - உயர்கல்வி & பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 மாவட்டங்களில் ரூ 18.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* திருவண்ணாமலை கோயிலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படுமா? - சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி

வியாபார பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பதில்

* தமிழ்நாட்டில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடிங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  - அமைச்சர் கீதா ஜீவன்

* மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம்.

சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது

பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும்

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் - தீர்மானம்

* அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிராகரிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

2016ல் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, 2017 பொதுக்குழுவில் நீக்கி தீர்மானம்

தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு நிராகரிப்பு

* மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

அதிமுக ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றம்; தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு

* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை.

* அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 4 வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து.

பொது நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகள் எதையும் மீறவில்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்.

* ஜார்க்கண்டில் 1,200 அடி உயர மலைப்பாதையில் 12 ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

* பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலுரை:

ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான்;

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது, 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது.

6 லட்சம் பேர் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்;

மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 4.8 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க 9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம்.

அரசுப் பள்ளிகளில் ரூ.25 லட்சம் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்;

பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர் கூட்டம்.

கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை;

15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் 56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

* உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலுரை:

திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு UGC எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதைத் தொடர UGC- உடன் பேச்சுவார்த்தை;

மேலும் 10 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் Ph.D படிப்புகள் அறிமுகம்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி பூங்கா;

இதன்மூலம் சுமார் 20,000 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் பயன் பெறுவர்.

வரும் கல்வியாண்டில் 10 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்;

41 உறுப்புக் கல்லூரிகள், விரைவில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பயிலும் சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம்  பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும்.

மணப்பாறை,செஞ்சி,அரவக்குறிச்சி, திருமயம்,ஸ்ரீபெரும்புதூர், தளி, அந்தியூர், திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்.

* புதுச்சேரியில் ஏப்.16-ல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

ஏப்.16ல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை-கல்வித்துறை அறிவிப்பு.

ஏப்.14-ல் தமிழ் புத்தாண்டு, ஏப்.15-ல் புனித வெள்ளி விடுமுறைகளை தொடர்ந்து ஏப்.16 ம் விடுமுறை அறிவிப்பு.

* அதிமுகவில் தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும்.

100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும்; ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றுவதே என் கடமை.

எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும் - வி.கே.சசிகலா

* தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து 16-ம் தேதியும் விடுமுறை.

18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு.

* பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷேபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இம்ரான்கான் மற்றும் அவரது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.

இறைவன் 22 கோடி பாகிஸ்தான் மக்களை இன்று காப்பாற்றி உள்ளார்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ஷெபாஸ் ஷெரீப் பேச்சு.

பாகிஸ்தான் மக்கள் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடுவர் - ஷெபாஸ் ஷெரீப்.

* பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இடையேயான  காணொலிக் காட்சி பேச்சுவார்த்தை :

இருநாட்டு தலைவர்களும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் - பிரதமர் அலுவலகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages