அக்னிப்புரட்சி இன்றைய (10.04.2022) முக்கிய செய்திகள்.
* நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தது.
பாகிஸ்தானின் புதிய பிரதமரை பரிந்துரைக்க இன்று பிற்பகல் 2 மணிக்கு பாக். நாடாளுமன்றம் கூடுகிறது.
புதிய பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் நவாஸ் ஷெரீப் சகோதரருமான, ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி!
* 4ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 110.85க்கு விற்பனை.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94- க்கு விற்பனை.
* கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 9 பேர் ராமேஸ்வரம் வருகை
பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து வரும் 15ம் தேதி ஈரோட்டில் கடையடைப்பு; கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் அறிவிப்பு!
* தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது - வானிலை ஆய்வு மையம்
* பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) ன் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கம்.
நேற்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது
* அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியீடு.
* சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டாலும்.
தொடர்ந்து தனியார் கல்லூரிகளுக்கு நிகரான கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
* திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.
உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்திற்கு பதிலாக பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு - பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் அறிவிப்பு.
No comments:
Post a Comment