அக்னிப்புரட்சி இன்றைய (13.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.04.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 7வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை.

* பீஸ்ட் திரைப்படம் வெளியான சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கு திரையினை கிழித்த ரசிகர்கள்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் நடிகர் விஜயின் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது

கரூர் மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* உள்ளாட்சி பிரதிநிதிகள் சரியாக பணியாற்றினால் இந்த அரசை 25 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது.

சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது- அமைச்சர் கே.என்.நேரு.

* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் பணிக்கு சேர போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்த 200க்கும் அதிகமான வட மாநிலத்தவர்; உறுதி செய்தது அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை.

* அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி, இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்- சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 70,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தும், நெல்லை பாதுகாக்காமல் வீணாக்கியிருப்பது வேதனையளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி.

கோடைகால தொடர் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் - வானிலை மையம்.

தென் மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள்,அரியலுார், கடலுாரில் மிககனமழைக்கு வாய்ப்பு.

டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - வானிலை மையம்.

* கோழி வளர்ப்பு - தமிழகம் முதலிடம்.
கோழி வளர்ப்பில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் தமிழக கோழியின எண்ணிக்கையில் முதலிடத்திலும், செம்மறியாட்டின எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும், வெள்ளாட்டின எண்ணிக்கையில் 7வது இடத்திலும், பசுவின எண்ணிக்கையில் 13வது இடத்திலும், எருமையின எண்ணிக்கையில் 14-வது இடத்திலும் இருப்பதாகவும் தகவல்.

* ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்: - பால்வளத்துறை அமைச்சர் நாசர்.

2 கோடி  குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நுகர்வோரின் தேவையை கருதி 10 வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.

வளசரவாக்கத்தில் தனியார் பங்களிப்புடன் ஆவின் வர்த்தக மையம் அமைக்கப்படும்.

ஒரு கறவை மாட்டிலிருந்து பெறப்படும் பாலின் அளவை நாள் ஒன்றுக்கு தற்போது உள்ள 6.80 லிட்டரிலிருந்து 7.02 லிட்டர் ஆக உயர்த்துவது தான் பால்வளத்துறையின் எதிர்காலத் திட்டம். பால்வளத்துறை அமைச்சர் நாசர்.

* தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் மருத்துவ சேவைகளை வழங்க, ரூ.85.53 லட்சத்தில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

அயிரை மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, தேனி மாவட்டத்தில் அயிரை மீன் ஆராய்ச்சி மையம் ரூ.2.91 கோடி செலவில் அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கிகள் போல, மீனவர்களும் வங்கி சேவைகளை எளிதாக பெற மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு ₹20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் தொடங்கப்படும்.

சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ₹50 கோடியில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும். - கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

* விவசாயிகள் கடன் பெறுவதற்கு வங்கிகளுக்கு செல்லாத அளவில் வரும் 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம்- வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

முருங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க மதுரையில் சிறப்பு ஏற்றுமதி வசதி மையம் அமைக்க நடவடிக்கை.

சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலா, முந்திரி போன்றவற்றிற்கான புவிசார் குறியீடு பெற பதிவு செய்யும் பணி நிறைவு.

வெங்காய சாகுபடி பரப்பினை உயர்த்தியும், வெங்காய சேமிப்பு அமைப்புகளை உருவாக்கியும், மக்களுக்கு ஆண்டுதோறும் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையில் 2022 - 23ம் ஆண்டில் வெங்காய சாகுபடி இயக்கம் 40 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் -வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

* விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இடி தாக்கி ஒரு பெண், 3 ஆண்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

தமிழ்நாடு ஆளுநரின்  தேநீர் விருந்தை சிபிஎம் புறக்கணித்த நிலையில் விசிக பங்கேற்காது என அறிவித்தார் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.

தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழ்நாட்டின் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது- தொல்.திருமாவளவன் எம்.பி.

* புதுச்சேரி கடற்கரை திருவிழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி கடற்கரை திருவிழா இன்று முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

* தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு.

பேருந்தில் ஏறி பயணிகளிடம் அவரவர் பயண கட்டணத்தை கேட்டறிந்து, சம்பவ இடத்திலேயே கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிட்டார்.

புக் செய்திருந்த பயணிகளின் நலன் கருதி உரிய நேரத்தில் அவரவர் ஊர்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்து நடவடிக்கை.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages