தமிழர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகட்டும்! சித்திரைத் திருநாளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து. - Agnipuratchi

தமிழர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகட்டும்! சித்திரைத் திருநாளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து.

Share This

தமிழர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகட்டும்! சித்திரைத் திருநாளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து.

மாம்பழப் பருவத்தின் வருகையை உணர்த்தும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, சித்திரையும் சிறப்பானது தான். சித்திரையில் தொடங்கப்படும் எந்தப் பணியும் வெற்றிகரமாக அமையும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உண்மையாக வேண்டும். தமிழர்கள் இனி தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்; அவர்களின் வாழ்வில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை பொங்குவதற்கு வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages