அண்ணல் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்தநாள்: அவருடைய திருவுருவச்சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா மரியாதை!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் பாவலைராயன், நிர்வாகிகள் பொ.ப.சங்கர், ஜெயராமன், முத்துக்குமார், சம்பத், சேது, தருமன், சிவக்குமார், வழக்கறிஞர் பாலாஜி, ராஜ்குமார் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment