ஏப்ரல் 14 - சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA - Agnipuratchi

ஏப்ரல் 14 - சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA

Share This

ஏப்ரல் 14 - சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA          

சித்திரைத் திருநாளில் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரைத் திருநாள் இந்திர விழாவாக, வசந்த விழாவாகக் கொண்டாடப்பட்டது.  "கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" என்ற பழம்பெருமைகளையும் தொன்மைகளையும் ஈடு இணையற்ற பண்பாடுகளையும் கொண்ட சிறப்பு தமிழ் மண்ணுக்கு உண்டு.

சித்திரை மாதம் வசந்த காலம். இளவேனில் பூக்கள் பூத்துக் குலுங்கும். கிராமங்கள் தோறும் எங்கு பார்த்தாலும் திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் நிறைந்து காணப்படும்.  இந்தச் சித்திரைத் திருநாள் முதல் எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கப் பெற்று, சமூகநீதி எல்லார்க்கும் உரியவாறு  கிடைத்து, அன்பும் அறநெறியும் ஓங்கி வளர்ந்து, மனித நேயமும் சகோதர நல்லிணக்கமும் நிலைத்து, ஒவ்வொருவரும் எடுத்த காரியத்தில் வெற்றிவாகை சூடி, இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கி, வளமும் வளர்ச்சியும் பெற்று, ஒவ்வொரு குடும்பமும்  நலமுடன் வாழ, நீடூழி வாழ இதயங்கனிந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages