அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2022) முக்கிய செய்திகள்.

* ஈஸ்டர் பண்டிகை கடைபிடிப்பு:
இயேசு பிரான் உயிர்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கடைபிடிப்பு.

தமிழகத்தில் நள்ளிரவில் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை.

* பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது வல்லுநர் குழு.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது.

உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் அரசு உறுதியளித்துள்ளது.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியது;

உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் அரசு உறுதி

* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுமுறை பயணமாக ஏப்.21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார்

எனது இந்திய பயணம், இரு நாட்டுக்கும் நல்லுறவை ஏற்படுத்த வழிவகுக்கும்.

வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களுக்கு உதவியாக அமையும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் இருந்து வருவதால், பிரிட்டனுக்கு மிகவும் மதிப்புமிக்க பங்காளியாக இந்தியா உள்ளது-பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வரும் ஏப்ரல் 21ஆம் தேதி, போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தர உள்ளார்.

* டெல்லியில் உள்ள உப்ஹார் திரையரங்கில் மீண்டும் தீ விபத்து.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்ப்பு.

1997ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

* நெல்லை: மானூர் அருகே நாஞ்சான் குளத்தில் நிலத்தகராறில் ஒரு பெண் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை.

மோதலில் மேலும் 5 பேர் படுகாயம்; போலீசார் தீவிர விசாரணை.

* வரும் 24ம் தேதி கிராம சபை கூட்டம்:
ஏப்ரல் 24ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்.

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.

* 4 நாள் விடுமுறைக்கு பிறகு நாளை மீண்டும் தமிழக சட்டமன்ற கூடுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages