கள்ளக்குறிச்சி கிழக்கு, மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் இன்று (16.04.22) மருத்துவர் அய்யா ஆலோசனை
பாட்டாளி மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். திண்டிவனத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இரு மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வக்குமார், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் ராஜா கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் இரு மாவட்டங்களிலும் உள்ள 42 ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களைச் சேர்ந்த சுமார் 90 நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment