அக்னிப்புரட்சி இன்றைய (15.04.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் 9 நாட்களாக மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.
* தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக ஜூன் 15ம் தேதி வரை, 61 நாட்களுக்கு ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை.
* மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கீழமாசியில் புறப்பட்ட திருத்தேர் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து
மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக திருத்தேரில் எழுந்தருளியுள்ளனர்.
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
* கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை, ஆற்றங்கரையோரம் இருந்து தரிசிக்க அறிவுறுத்தல்.
தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால், யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் - மதுரை ஆட்சியர்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்: குலுங்கியது மதுரை…..
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்த காட்சிகள்…..
* தொலைதூர படிப்பு விவகாரத்தில் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்
பல்கலைக் கழக மானியக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.
2015-2021ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட படிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என யுஜிசி அறிவித்திருந்தது.
* உலகெங்கும் கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி தினம் இன்று கடைபிடிப்பு.
தமிழகமெங்கும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.
* எத்தனை முறை நீ ஏமாற்றப்பட்டாலும், ஒருபோதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக்கொள்ளாதே, அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார், நேர்மைக்கு என்றுமே மரணமில்லை!
ஏழையிடம் வாங்கும் சாபமும், பணக்காரனிடம் வாங்கும் பாராட்டும் ஆபத்தானவை; தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை, விட்டு கொடுப்பவன் வீழ்ந்ததில்லை!!
வாய்ப்புகள் விலகிப் போவதை எண்ணி கலங்கி நிற்காதே, எல்லாம் நன்மைக்கே, என்றெண்ணி தொடர்ந்து முயற்சி செய், இழந்ததை விட மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்!!!
* ரயில்களில் முகக்கவசம் தேவையில்லை.
ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட வந்த 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது.
பயணிகள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் தகவல்.
* கள்ளக்குறிச்சி சாலை விபத்தில் சார் ஆட்சியர் உயிரிழப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
விபத்தில் இறந்தவர் கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபுரிந்தவர்.
* சென்னை திருமுல்லைவாயில் நரிக்குறவர் மக்களை நேரில் சென்று பார்த்து காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நரிக்குறவர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது
நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் குடிநீர், கழிப்பறை, சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நரிக்குறவர் அன்னதானம் வழங்க மறுக்கப்பட்டுள்ளதை அறிந்து நானும் வருத்தப்பட்டேன்.
* தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது - பள்ளிக்கல்வித்துறை.
4 நாட்கள் விடுமுறையின்போது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை.
* முஸ்லீம் சமுதாயத்தை சிறுமைப்படுத்த முயற்சிப்பதா?
தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்
பீஸ்ட் திரைப்படத்தால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது - முதல்வருக்கு ஜவாஹிருல்லா கடிதம்
வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
* ஆக்கிரமிப்புகளை தடுக்காததால்
அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது- சென்னை உயர் நீதிமன்றம் வேதனை.
பட்டா வழங்க கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை, நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது - உயர் நீதிமன்றம்.
அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை - நீதிமன்றம்
* அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ கல்லூரி இருக்கைகளை மீண்டும் தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
மருத்துவ சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் - ஓபிஎஸ்.
* கடந்த 10 நாட்களில் 2020-21ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக 1.16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.183.13 கோடி வழங்கப்பட்டுள்ளது- வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை.
* NATO ராணுவ கூட்டமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைந்தால், குறிப்பிடப்படாத கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் -ரஷ்ய வெளியுறவுத் துறை எச்சரிக்கை.
விரைவில் NATO-வில் இணைய இரு நாடுகளும் முற்பட்டுள்ளன.
* இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும்-மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த மார்ச் 31ல் பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன்.
தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - முதல்வர்.
* திமுக பேரூராட்சி, நகராட்சி வார்டு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் - திமுக தலைமை அறிவிப்பு.
மாநகராட்சி வார்டு கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்.29 முதல் மே 1ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் - திமுக தலைமை.
* நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடம் இருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்-வக்பு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பாததால் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கிறோம் - உயர்நீதிமன்றம் நியமித்த குழு விளக்கம்.
* டெல்லியில் ஏப்.30ம் தேதி மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது.
மத்திய அரசுடனான மாநில அரசின் உறவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாட வாய்ப்பு.
2 நாள் நடைபெறும் மாநாட்டில் அனைத்து முதலமைச்சர்களுக்கும் பிரதமர் விருந்தளிக்க உள்ளார்.
* மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
தமிழ் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கவலை படாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை.
தமிழ்நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் நம்பக்கூடிய ஏதுமறியாதவர்கள் என்ற இறுமாப்பு நினைப்பில் திமுக இருக்கிறது.
தொடர்ந்து ஆதாரமில்லாத செய்திகளை திரும்பத் திரும்ப சொல்வதால் அவையெல்லாம் உண்மையாகிவிடாது- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை.
* கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஈஸ்வரப்பா.!
கர்நாடக மாநில அமைச்சர் ஈசுவரப்பா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலைக்கு காரணமென ஈசுவரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு.
No comments:
Post a Comment