அக்னிப்புரட்சி இன்றைய (19.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.04.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் 13 நாட்களாக மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.

* இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டின் வானிலை, பருவகால மற்றும் புவிஇயற்பியல் மையம் தெரிவித்து உள்ளது.

கலாவேசியில் இருந்து 779 கிமீ தொலைவில் இன்று காலை 6.53 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

* சென்னை: பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டத்தை, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பள்ளிப்பருவம் என்பது திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம்; திருட முடியாத சொத்து உங்களின் கல்வி மட்டும் தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

* ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் தி.க., திராவிடர் விடுதலை கழகம், வி.சி.க., கம்யூ.கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

* 2 ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சமயபுரம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு.

தமிழக அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை.

* சென்னை கிழக்கு கடற்கரை சாலையை  6 வழிச் சாலையாக மாற்றுவதற்கான பணிகள் மத்திய அரசால் நடைபெற்று வருகிறது - பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

சாலை அமைக்கும் வரை சுங்க கட்டணம் தமிழக அரசுக்கு கிடைக்கும் - அமைச்சர் எ.வ.வேலு.

* எருமை மாடு கூட கறுப்பாக இருக்கிறது: அதனால் அதுவும் திராவிடனா?- சீமான் கேள்வி.

இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா, கறுப்பு உடை அணிந்த தனது புகைப்படத்தை பகிர்ந்து, ‛கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்' என குறிப்பிட்டிருந்தார். இதனால், இளையராஜாவின் கருத்திற்கு எதிர்கருத்தை அவரது மகனே வெளிப்படுத்தியுள்ளதாக ஒருசாரர் தெரிவித்து வந்தனர்.

கறுப்பு, திராவிடர் என்ற கருத்துகள் திடீரென பேசுப்பொருளாக மாறியது.
இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒருசேர வந்துள்ளன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து. தம்பி யுவன், திராவிடனாக இருக்க வேண்டும், இல்லையெனில் தமிழனாக இருக்க வேண்டும். யுவன் சின்ன பிள்ளை என்பதால் குழம்பி போயுள்ளார். கறுப்பாக இருப்பதால் தான் திராவிடன் என அண்ணாமலை கூறுகிறார். எருமை மாடு கூடதான் கறுப்பாக இருக்கிறது. அதற்காக அதை திராவிடன் எனக் கூற முடியுமா? என கூறினார்.

* நான் அதிகாரத்தை பயன்படுத்துவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்;

நான் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை, அன்பைத் தான் பயன்படுத்துகிறேன்.

என்னை விட வலிமையான ஆளுநர் இங்கு யாரும் இல்லை, பெண்களால் எதையும் சாதிக்க முடியும்-ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

தெலங்கானாவில் முதலமைச்சர் சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது;
நான் தமிழ்நாட்டை குறிப்பிடவில்லை -தமிழிசை சவுந்தரராஜன்

* 10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு;

தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

* அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரை:

Greenfield Airport-க்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது; சென்னையில்  எந்த இடத்தில் Greenfield Airport அமைய உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

முதலமைச்சர் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்;
முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு.

தமிழ் நிலப்பரப்பின் எல்லா மாவட்டங்களிலும் சமச்சீரான முறையில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

தொழிற்துறையின் பெயர் மாற்றம்; தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு & வர்த்தகத்துறை என்று பெயர் மாற்றம்.

முதலீட்டு ஊக்குவிப்பு & எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்; விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.

ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரியளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும்;

சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும்.

கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா ரூ.1,800 கோடி மதிப்பில் 3,000 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும்;

தஞ்சாவூர் & உதகமண்டலத்தில் சுமார் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும்;

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்துறை தொழிற்பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு சுமார் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்;

சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

வான்வெளி & பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் ரூ.500 கோடி மதிப்பில் கோவையில் அமைக்கப்படும்;

கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்.

* ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்;

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில் சாதாரண மக்களுக்கு இந்த அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

மயிலாடுதுறையில் ஆளுநர் சென்ற ஊர்தி மீது போராட்டக்காரர்கள் கற்கள், கருப்பு கொடி கம்பங்களை வீசியதாக கண்டனம் தெரிவித்து அறிக்கை

* பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

* ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம்.

ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை வீசினர். ஆளுநரின் கான்வாய் சென்ற பின்பு காவல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன.

பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி  ஆர்பாட்டக்காரர்களை கைது செய்தனர்;

அவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்:

அரசியலமைப்புக்கு எதிரான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆளுநரின் செயல் அல்ல.

ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள்,அதை தடுக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுநருக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்புக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.

* எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான TANCET பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு.

வரும் 21ம் தேதி மாலை 4 மணி வரை tancet.annauniv.edu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

* நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages