அக்னிப்புரட்சி இன்றைய (20.04.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை.
* மராட்டியம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
* மே 1 முதல் அமலுக்கு வருகிறது தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை.
கட்டடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை.
உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையிலே அனுமதி - அரசாணை.
முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு.
* தமிழகத்தில் கொரோனா தடுப்பு - தீவிரப்படுத்த ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்- அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அறிவுறுத்தல்.
* கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம்.
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு. வட மாநிலங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* 6,300 முழு நேர ரேஷன் கடைகளுக்கும், 763 பகுதி நேர ரேஷன் கடைகளுக்கும் நிரந்தர கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை.
நடப்பாண்டு முதல், ஆண்டுதோறும் 500 ரேஷன் கடைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி.
* சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு.
* சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 76 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா.
வெளிநடப்பு செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, சட்டப்பேரவையில் கோஷம் எழுப்பிவரும் அதிமுக எம்எல்ஏக்களை அவைக்காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு.
* ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?-எடப்பாடி பழனிசாமி.
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு கொடுத்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஆளுநரின் பாதுகாப்பில் காவல்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை?; இது தமிழ்நாட்டு காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி-எடப்பாடி பழனிசாமி.
* நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி அரசியல் செய்ய வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய்.
ஆளுநரின் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது; இதில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது.
ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆளுநர் விவகாரத்தில் விடியா அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி, எனது பதிலைக் கேட்காமலேயே வெளியில் சென்றுள்ளார்.
நமக்கு இதுதான் வாய்ப்பு என இதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளின் இயல்பு தான்.
வழக்கம் போல் சேர்ந்தே அறிக்கை விடும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளனர்.
* சசிகலாவிடம் நாளை விசாரணை.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நாளை விசாரணை.
நாளை காலை ஆஜராக சசிகலாவுக்கு நீலகிரி காவல்துறை சம்மன்.
* பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்.
பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது.
விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை - சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் பேச்சு.
பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால், நமக்கு இப்படி எனர்ஜியான பிரதமர்தான் தேவை - நடிகர் பாக்யராஜ்
* முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
மேற்பார்வை குழுவில் ஏற்கெனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
* டெல்லியில் மீண்டும் முககவசம் கட்டாயம் முககவசம் இல்லை என்றால் 500 ரூபாய் அபராதம் என அறிவிப்பு
* 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
* பாஜகவின் அனைத்து திட்டங்களுக்கும் இனி தமிழில் பெயர் வைத்து அழைக்கப்படும்
இந்தி பெயர் கொண்ட திட்டமாக இருந்தாலும் தமிழக பாஜக சார்பில் அந்த திட்டத்திற்கு தமிழில் பெயர் வைக்கப்படும் - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை
* ஆளுநர் மீதான தாக்குதலை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்;
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவிற்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர் - நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
* ஆளுநரின் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது; இதில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நமக்கு இதுதான் வாய்ப்பு என இதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளின் இயல்பு தான்;
வழக்கம் போல் சேர்ந்தே அறிக்கை விடும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளனர்
ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை:
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை.
RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% எல்கேஜி அல்லது 1ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.
* இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் மோடி தொலைபேசியில் நன்றி தெரிவிப்பு.
தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி.
பிரதமர் மோடியின் சட்டங்களை நினைத்து அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா பாராட்டியிருந்தார்.
* தமிழகத்தில் 60 இடங்களில் 10 ஆயிரம் அரசு வாடகை குடியிருப்புகள் உடனடியாக மாற்றி அமைக்கப்படும்.
மெரினா முதல் கோவளம் இடையிலான சுமார் 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை ரூ.100 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும் - வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு.
செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் அமைக்கப்படும்
பன்னடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கப்படும்.
கடந்த ஆட்சியில், விற்பனைக்காக கட்டிய 1082 வணிக அலகுகள், 3505 குடியிருப்புகள் மற்றும் 5074 மனைகள் விற்காமல் உள்ளன.
எம்எல்ஏ- க்களும் குடியிருப்புகள் வேண்டும் என்று கேட்கிறார்கள், இந்த குடியிருப்புகளை வாங்கினால் வீட்டு வசதி வாரியம் பயனடையும்- அமைச்சர் முத்துசாமி.
* சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தள பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் 29 ஏக்கரில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற் பேட்டை அமைக்க திட்டம். இதன்மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு.
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் ₹25 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
மக்கள் வாழ தகுதி இல்லாத வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
தமிழகத்தில் 30,392 குடியிருப்புகள் வாழ தகுதியில்லாத குடியிருப்புகளாக கண்டறியப்பட்டுள்ளது - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
* வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்பதன் மூலம் விவசாயிகள் பக்கம் அரசு இருக்கிறது என்ற பார்வை மக்களுக்கு வந்துவிட்டது.
மாத்திரைகள் பின்னால் ஓடி கொண்டிருக்கிறோம், வளரும் சமுதாயத்திற்கு நல்ல உணவை கொடுக்க வேண்டும்- அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.
* பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற தனது கருத்துக்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரினார்.
நான் பேசிய அந்த வார்த்தை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.
நான் பாஜக நபர் அல்ல. நான் திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன்.
எனது திரைப்படங்களில் திராவிட கருத்துகள் இருக்கும். இனியும் அது தொடரும் - பாக்கியராஜ்.
* மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை தரப்படும் என உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
12,524 மக்கள் நல பணியாளர்களுக்கு மாதம் ரூ,7,500 ஊதியத்துடன் மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலப் பணியாளர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
* ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீரோன் பொல்லார்ட் அறிவிப்பு.
No comments:
Post a Comment