அக்னிப்புரட்சி இன்றைய (23.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.04.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் 17 நாட்களாக மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.

* நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி என்பவரரை மர்ம நவர் ஒருவர் கத்தியால் குத்தி சரமாரி தாக்குதல்.

தாக்குதல் நடத்திய நபர் போலீசாரால் கைது; உதவி ஆய்வாளர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

* ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் 55 பேருக்கு தொற்று உறுதி;

தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர்

தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை;
இப்போதுவரை தொற்று பாதிப்பு விகிதம் குறைவாகதான் உள்ளது.- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

* மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 ரூபாய் விதிக்கப்படும்;

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்

* புதுச்சேரி மாநில அதிமுகவின் உட்கட்சி தேர்தல் இன்று, நாளை என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல்கட்டமாக இன்று வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

* வடபழனி, திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட 10 முக்கிய கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், புளியோதரை, லட்டு உள்ளிட்ட இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

* 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு.

3 மணி நேரமாக இருந்த செய்முறைத்தேர்வு, 2 மணி நேரமாக குறைப்பு.

* நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சகோதரி மார்கரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும். - எதிர் கட்சி தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.

பயிற்சி தருவதற்கு கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனே நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும்.

திருநெல்வேலி பழவூரில் பெண் எஸ்.ஐ.யை தாக்கியவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவர்னர் முதல் காவலர் வரை தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.

* கோவை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல்.

கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* நோ பால் சர்ச்சை: நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100% அபராதம்.

நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதித்ததுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20-வது ஓவரில் மெக்காய் வீசிய 3-வது பந்து பேட்டர் போவெல் இடுப்பு உயரம் வீசப்பட்டு, கள நடுவர் நோ பால் கொடுக்காததால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் விரக்தி அடைந்து பேட்டர்களை களத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியது பேசு பொருளாகியது.

* ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மின்சார பைக்கின் பேட்டரி வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

சார்ஜ் செய்யும் போது பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவக்குமார் என்பவர் படுக்கையறை அருகே மின்சார பைக்கின் பேட்டரியை சார்ஜ் செய்துள்ளார்.

* கடலூர் : பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சாலை பொருட்களுக்கு தீ வைப்பு

இயங்காத நிலையில் இருந்த தொழிற்சாலையின் பொருட்களுக்கு தீ வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை

* மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக அறிவித்ததையடுத்து, மராட்டிய எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா, எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோர் மும்பையில் கைது

* அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகை அழைத்திருக்கும் மாநாட்டை துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும்" - பிரின்ஸ் கஜேந்திர பாபு

* அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது;  தேவையை பூர்த்தி செய்ய தினசரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது - ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

* வெப்பச்சலனம் காரணமாக தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

* தமிழகத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; உயிரிழப்பு ஏதும் இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஏராளமான பாஜகவினர் உற்சாக வரவேற்பு.

* தமிழ்நாடு வழக்கறிஞர்களின் குடும்ப பாதுகாப்பு நலனுக்காக, வழக்கறிஞர்களின் சேமநல நிதியை 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது
-சரத்குமார், சமக தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages