அக்னிப்புரட்சி இன்றைய (24.04.2022) முக்கிய செய்திகள்.
* பெரம்பலூர்: விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
* காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
* தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஏப்ரல் 25) ஆலோசனை.
143 பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 28% உயர்த்த முடிவு?
சர்கரை, அப்பளம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்தலாமா? - மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துகேட்பு.
* மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்:
தமிழகத்தில் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் கடிதம்.
* ஜம்மு காஷ்மீரில் அனைத்து மட்டத்திலும் ஜனநாயகம் சென்றடைந்தது பெருமைக்குறிய விஷயம்;
இங்கு முதலீடு செய்ய ஏராளமான முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்" -பிரதமர் மோடி
* வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு;
தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
* முறைகேட்டில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்;
உள்ளாட்சிகளை மேம்படுத்த திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;
கொரோனா நெறிமுறைகள் அனைத்தையும் ஐஐடி மாணவர்கள் பின்பற்றுகின்றனர்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* டிஜிட்டல் பொருளாதாரம் வளர ஆன்லைன் முறையில் பணப் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க வேண்டும்;
நாள்தோறும் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது - பிரதமர் மோடி
* அடுத்த ரயில்வே பட்ஜெட்டுக்குள் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்; இல்லையெனில், ரயில் மறியலில் ஈடுபடுவேன் - மாணிக்கம் தாகூர், எம்.பி
* வரும் 8 ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி சிறப்பு தடுப்பூசி திருவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கிறது
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது; தமிழகத்தை பொறுத்த வரை, இறப்பு விகிதம் இல்லாமல் இருந்து வருகிறது.
* வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடைபெறும் எனும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை
-மநீம தலைவர் கமல்ஹாசன்
* அதிமுக சார்பில் வரும் 27ம் தேதி இஃப்தார் விருந்து அறிவிப்பு
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு - அதிமுக தலைமை
* புதுச்சேரி:கம்பன் கலையரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்பு.
புதுச்சேரி காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
பிரதமர் மோடி சொன்னது போல பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்;
ரூ.6 கோடிக்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்-உள்துறை அமைச்சர் அமித் ஷா.
* தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாணவரும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தாய்மொழியான தமிழ் மற்றும் உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் உள்ளது.
உண்மைக்கு புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை.
* சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து;
பணிமனையில் இருந்து சென்ற ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. பிரேக் சரியாக இயங்காததால் விபத்து.
ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
* நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80 லிருந்து 20 காசுகள் குறைத்து ரூ.3.60 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment