அக்னிப்புரட்சி இன்றைய (25.04.2022) முக்கிய செய்திகள்.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆலோசனை.
* பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் 58.2% வாக்குகள் பெற்று மீண்டும் தேர்வு
* புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தறுத்து கொலை செய்து அவரது மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை.
கொலை செய்யப்பட்ட நபர் 52 வயதான முன்னாள் ஜமாத் தலைவர் முகமது நிஜாம் - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
* குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் - TNPSC தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 14 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
* CUET பொது நுழைவுத் தேர்வு; தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்.
பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமைகளின் தலையிடவில்லை.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், அதை மேம்படுத்தும் பணி மத்திய அரசுக்கும் உண்டு.
கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர தனியாக பயிற்சி எடுப்பதையும், கூடுதல் செலவையும் தடுத்துள்ளது CUET.
CUET தேர்வுக்கு இதுவரை 3.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும்.
12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே UG படிப்புகளுக்கான CUET தேர்வு நடத்தப்படுகிறது.
* தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகிறது
* சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்காராம் அளித்த புகாரில் நடவடிக்கை!
* நாகையில் கஞ்சா கடத்தல் கும்பலோடு காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம். தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவு.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை.
எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
பொது இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம். தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதா.
சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார்.
ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதா.
துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது
துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்
*13 பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன -முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குஜராத் மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உயர்கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது
இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ்
* தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் நடுநிலையோடு திறமைவாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும்
துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது - நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
* பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது;
இதே நிலை தான் கர்நாடகம், தெலங்கானாவிலும் உள்ளது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும் ஆளுநர் - அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* ஊட்டி ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
- சிந்தனை செல்வன் எம்எல்ஏ
* சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு.
* துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ள சுயாட்சி அதிகாரமாக இருக்க வேண்டும் - சிந்தனை செல்வன் எம்எல்ஏ
* சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான விவகாரம்
ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு
* பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
அதிமுக, பாஜக தவிர்த்து இதர கட்சிகள் அனைத்தும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவுக்கு ஆதரவு
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
* முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
மாதம்தோறும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமையில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு
* துணை வேந்தர் மசோதாவின் மீது அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பேச எழுந்த போது, அவரை ‘உட்காருடா’ என வார்தையை பயன்படுத்தி, மரியாதை குறைவாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்..
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒபிஎஸ் குற்றச்சாட்டு
* முகக்கவசம் அணியாவிட்டல் ரூ.500 அபராதம் என்று சொல்லப்பட்டிருக்கிறது
ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முகக்கவசம் அணியவில்லை
அரசின் அறிவிப்பு அனைவருக்குமானதா? எம்எல்ஏக்களுக்கு இல்லையா?
- எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்
* கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு.
முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்களை தவிர பிறருக்கு விடுமுறை - அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை.
கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விடுமுறை அறிவிப்பு.
* சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
இதுவரை ஐஐடியில் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 40 பேர் குணமடைந்துள்ளனர்.
* டெல்லியில், சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
ஏ.கே.ஆண்டனி, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்பு
* தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்.
காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க, தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்களுக்கு வலியுறுத்தல்.
* CSKvsPBKS: பஞ்சாப் வீரர் ரிஷி தவான் முக பாதுகாப்பு கவசம் அணிந்து விளையாடுகிறார். இது பலருக்கும் புதிது. ஏன்?
ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்றின்போது ஒரு பந்து அவரது முகத்தை தாக்கியது. இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூக்கில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment