மரக்காணம் கலவரம் பொய்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பாமகவினரும், இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களும் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்! - Agnipuratchi

மரக்காணம் கலவரம் பொய்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பாமகவினரும், இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களும் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

Share This

மரக்காணம் கலவரம் பொய்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பாமகவினரும், இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களும் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

2013-ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் நாள் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க இளைஞர் சித்திரைப் பெருவிழாவில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர்கள் மீது மரக்காணத்தில் திட்டமிட்டு கலவரம் நிகழ்த்தப்பட்டது.  அதில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த  இருவர் கொல்லப்பட்டனர். ஆனால், மரக்காணம் கலவரத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தியதாக  பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திண்டிவனத்தில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பா.ம.க.வினர் 20 பேரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.  முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சசிக்குமார், கலையரசன் உள்ளிட்ட அவர்கள் 20 பேரும் தைலாபுரம் இல்லத்தில் என்னை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த வழக்கில் அவர்களுக்காக வாதாடி விடுதலை பெற்றுத் தந்த  திண்டிவனம் பாலாஜி தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினரும் என்னிடம் வாழ்த்து பெற்றார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages