அக்னிப்புரட்சி இன்றைய (27.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.04.2022) முக்கிய செய்திகள்.

* தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து  11 பேர் பலி. அப்பர் மடம் திருவிழாவை முன்னிட்டு சப்பரம் திருவிழா நடைபெற்றது.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர்பவனி நிகழ்ச்சியின் போது சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்தது.

தேரை இழுத்த 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு.

தண்ணீர் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் தேரை விட்டு தள்ளி நின்றதால் மேலும் பலர் உயிர் தப்பி உள்ளனர்.

காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

* கொரோனா பரவல் அதிகரிப்பு- அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

இன்று நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை.

டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பால் ஆலோசனை.

* தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து வேதனையடைந்தேன்.

தஞ்சை தேர்பவனியில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

மழை பெய்தால் மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் - மாவட்ட நிர்வாகம்

* தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

* தஞ்சை களிமேடு அப்பர் கோயில் தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம்  மிகவும் மனவேதனை அளிக்கிறது;

அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

* தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு தேர் திருவிழா நேர்வில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு தலா ₹50,000 இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.

* நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று ஆலோசனை

* தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்  - தமிழிசை சௌந்தரராஜன்

* தஞ்சை களிமேடு தேர்த் திருவிழா விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.

தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம்

* தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட முன்வரைவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்கிறார்

* 2022 ஆம் ஆண்டின் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

வரும் மே 2ஆம் முதல் 4ஆம் வரை ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

* தஞ்சை களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகவும் மன வேதனையும், சோகத்தையும் அளிக்கிறது
- செல்வப்பெருந்தகை எம் எல் ஏ

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்;

இது போன்ற திருவிழாக்கள் உரிய பாதுகாப்போடு அரசு அமைத்துக்கொடுத்த விதிகளின் படி நடைபெறவேண்டும் - செல்வப்பெருந்தகை எம் எல் ஏ

* தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு தேர் திருவிழாவில் உயிரிழந்த 11 பேர்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்;

காயமடைந்த அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும்
- கே.பாலகிருஷ்ணன் சிபிஎம்

* சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் லேசான தீவிபத்து!
2 தீயணைப்பு வாகனங்கள் மூலம்  தீ அணைக்கப்பட்டதாக தகவல்

* தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் தலா ₨.1 லட்சம் நிவாரணம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவிப்பு.

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 15 பேருக்கு தலா ₨25 ஆயிரம் நிவாரணம் - அதிமுக.

* தமிழ்நாடு,மஹாராஷ்டிரா, மேற்குவங்கம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கலால் வரியை குறைக்காமல் இருக்கிறது.2021 நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததை போல மாநிலங்கள் குறைக்கவில்லை. மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்க வில்லை. - பிரதமர் மோடி பேச்சு

* LIC IPO ஒரு பங்கினின் விலை ₹902 - ₹949 ஆக நிர்ணயம்!

₹21000 கோடி மதிப்பிலான எல்.ஐ.சியின் பொதுப் பங்கீடு பங்கு விற்பனை மே 4 முதல் தொடங்க உள்ளது

* தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.

* தமிழக அரசு மீது பிரதமர் மோடி அதிருப்தி.

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை.

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கலால் வரியை குறைக்காமல் இருக்கிறது.

2021 நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததை போல மாநிலங்கள் குறைக்கவில்லை.

மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாகின்றனர்.

சென்னையில் ரூ.111க்கும் அதிகமாக பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது - பிரதமர் மோடி.

* பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்வி .

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது - தமிழக அரசு தரப்பு

* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நரம்பியல் மற்றும் நெஞ்சகத் துறைக்கு புதிய கட்டடம் உருவாக்க வரும் நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும் - மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய சாதனையாளருக்கு கலைஞர் பெயரில் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன் 3ம் தேதி இவ்விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்

தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் -அமைச்சர் சுவாமிநாதன்

* தஞ்சாவூர் களிமேட்டில் தேர் சப்பரம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரண உதவி அளித்து ஆறுதலும் கூறினார்.

* தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியீடு.

ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் - தேர்வுத்துறை இயக்குநர்.

dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடத்திட்டத்தை அறிந்து கொள்ளலாம் - தேர்வுத்துறை இயக்குநர்

* அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

நிலத்தை கணக்கிடவும், ஆக்கிரமிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது - இந்து சமய அறநிலைய துறை.

தஞ்சை, ஈரோட்டில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து சொகுசு பங்களா, அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டதாக வழக்கு.

* தஞ்சையில் நடந்த தேர் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

மக்களுடன் எப்போதும் இருப்பேன்
சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டேன்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages