சேலம் மேற்கு, சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு செய்தார்!
பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளின் ஒரு கட்டமாக கட்சி அமைப்பு அடிப்படையிலான மாவட்ட நிர்வாகிகளுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்தாய்வு நடத்தி வருகிறார். அந்த வரிசையில் சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்தாய்வு நடத்தினார்.
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, செயலாளர் சேலம் கார்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வக்குமார், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. இராஜசேகரன், மாவட்டத் தலைவர் மாணிக்கம் மற்றும் 18 ஒன்றியங்கள், 2 நகரங்கள், 6 பேரூர்களைச் சேர்ந்த 52 நிர்வாகிகளும், சேலம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் எஸ்.கே. செல்வகுமார், மாவட்டத் தலைவர் முத்துசாமி, 12 ஒன்றியங்கள், 3 நகரங்கள், 8 பேரூர்களை சேர்ந்த 46 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இரு மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment