அக்னிப்புரட்சி இன்றைய (28.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.04.2022) முக்கிய செய்திகள்.

* குரூப் 4 தேர்வு -  விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவு.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று இரவு 12 மணி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

* ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலான் மஸ்க் ட்வீட்.

கோகோயினை மீண்டும் கோகோ கோலா உடன் சேர்க்கப்போவதாகவும் பதிவு.

ட்விட்டர் பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க, அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும் - எலான் மஸ்க்.

* தஞ்சை, களிமேடு தேர் விபத்து:“உயிரிழந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதியை உயர்த்தி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

எதேச்சையான விபத்தை அரசியல் ஆக்கக்கூடாது, அரசை குறை கூறுவதில்  நியாயமில்லை- பாலகிருஷ்ணன், சிபிஎம் மாநில செயலர்.

* உழவர் நலத்துறை சார்பில், புதிய தோட்டக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மஞ்சள் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கோவை வேளாண்மை பல்கலை.யில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்.

ஈரோடு பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி மையம்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிக் கல்வி பாடத்திட்டம் உள்ளிட்டவைகளை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

* திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு

உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

வேட்புமனுவில் குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு.

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தள்ளுபடி.

* கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் தேனி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம்.

நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சந்திர சேகர் குன்னூர் டி.எஸ்.பி.யாக நியமனம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தி வரும் தனிப்படையில் டி.எஸ்.பி. சுரேஷ் இடம் பெற்றிருந்தார்.

* பைக் ரேஸ் - ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்றவர்கள் கைது.

ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் தயாரித்து விற்ற அண்ணாசாலை ‘சென்னை பைக்கர்ஸ்', ஆலந்தூர் 'நியூமெகா ஸ்டிக்கர்ஸ்’ கடை உரிமையாளர்கள்  கைது.

கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் பிரவீன்குமார், சரத்குமாரை காவல்துறை பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை போக்குவரத்து காவல்துறை.

* பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது.

7 தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும்.

சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும், அது அவப்பெயரை தேடித்தரும்.

அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க, 7 தமிழர் விடுதலை கோப்பில் உடனடியாக கையெழுத்திட வேண்டும்- இராமதாசு, பாமக நிறுவனர்.

* பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார் -பேரவையில் முதல்வர் உரை.

பிரதமர் மோடியின் காணொலி வாயிலான கூட்டத்தில், பெட்ரோல், டீசல் வரியை சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகை காணவில்லை என கூறியுள்ளார்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசியிருக்கிறார்-முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

மத்திய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை குறைத்தது தமிழக அரசு. 8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதா?

பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.

* எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் மீதே பழி- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

எரிபொருள் விலையேற்றம் - மாநில அரசுகளே காரணம்; நிலக்கரி பற்றாக்குறை - மாநில அரசுகளே காரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறை - மாநில அரசுகளே காரணம்; மொத்த எரிபொருள் வரிகளில் 68% வரியை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.

எனினும் பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார் பிரதமர் மோடி.

அவரது கூட்டாட்சி முறை அனைவர்க்கும் சமமானதாக இல்லை.
அனைவரையும் வற்புறுத்துகிறது -ராகுல் காந்தி.

* பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்:

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் 8ம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

அஞ்சலி செலுத்தும்போது மாணவனின் உடலுக்குத்தான் முதலில் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன்.

ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் தெரிவித்தால்தான் என்னை நானே தேற்றிக்கொள்ள முடியும் என முதலமைச்சர் கூறினார்.

தஞ்சாவூர் தேர் விபத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.
உடனடியாக தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை சப்பர திருவிழா விபத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். 

* சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது.

* அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழக அரசு விளக்கம்.

அரசு ஊழியர்கள் எந்த நாள் ஒய்வு பெற வேண்டுமோ,அந்த நாளில் இல்லாமல், அந்த மாதத்தின் கடைசி நாளில் ஒய்வுபெறுவார்கள்- தமிழக அரசு.

* தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும்.

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது;

வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

எனது விலைப் பட்டியல் எனது உரிமை" என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.

* டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்.

ஜூன் 26ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜூலை 2ம் தேதிக்கு மாற்றம்.

* பட்டியலினத்தவர் என போலி சான்றிதழ் கொடுத்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஊழியருக்கு 40% மட்டுமே ஓய்வூதியம் வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் துறை ரீதியான விசாரணையை நடத்த விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages