அக்னிப்புரட்சி இன்றைய (29.04.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.04.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.04.2022)  முக்கிய செய்திகள்.

* இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பிவைக்க உரிய அனுமதியை ஒன்றிய அரசு வழங்கக் கோரி தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

* சென்னையில் 23வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* திருச்சி :  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

* கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;  2,496 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், 60 பேர் உயிரிழப்பு.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹272 அதிகரித்து சவரன் ₹39,072க்கும், ஒரு கிராம் ₹4,884 க்கும் விற்பனை!

* திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம்.

தங்கமணி உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.

* சிறையில் இருந்த தங்கமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; உடனடியாக  திருவண்ணாமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிரிழந்துள்ளார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த உடன், உரிய விசாரணை நடத்தப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம்.

1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.

* இலங்கைக்கு உதவி - சட்டப்பேரவையில் தனி தீர்மானம்.

இலங்கை தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு.

இலங்கையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது.

இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழக அரசு முடிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கட்சி எல்லைகளை கடந்து, கருணை உள்ளத்துடன் அனைவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுகிறேன்.

இலங்கை மக்களுக்கு உதவ பிரதமர் மோடியிடம் நேரடியாகவும் கோரிக்கை வைத்துள்ளேன். அனுமதி அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

* இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு விண்ணைத்தொடும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி.

அரசு கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஆதரிக்கிறோம் - எடப்பாடி பழனிசாமி.

* இலங்கை மக்களுக்கு உதவ, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்குவதாக பேரவையில் ஓபிஎஸ் அறிவிப்பு

* இலங்கை மக்களுக்கு உதவ ரூ.50 லட்சம் வழங்க முன்வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* கடந்த கொரோனா காலத்தின்போது புதுச்சேரியில் 40% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பாரபட்சம்மின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதுச்சேரிக்கு மது அருந்ததான் வருவார்கள். ஆனால், தற்போது பெட்ரோல் போட வருகிறார்கள- தமிழிசை செளந்தரராஜன், துணைநிலை ஆளுநர்.

* விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு.

மரங்களை வெட்டாமல், நீர்நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என கூட்டுக்குழு ஆய்வு செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது - பசுமை தீர்ப்பாயம்.

* புதுச்சேரி சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் செலவை வைத்தவர்களிடமே வசூலிக்க வேண்டும்-புதுச்சேரி நகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே நகராட்சியிடம் புகார் அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரர் தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி, புதுச்சேரியில் பேனர் கலாசாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். புதுச்சேரி நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே, அதை அகற்றியதற்கான செலவை புதுச்சேரி நகராட்சி வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

* கல்லூரிகளில் ஷிப்ட் முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது.

பெண் கல்வியை ஊக்குவிக்க காலையில் மாணவிகளுக்கும், மாலையில் மாணவர்களுக்கும் வகுப்புமுறையை மாற்ற திட்டம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்.

* மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை உயர்வு. - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 1.74 லட்சமாக உயர்வு-சட்டப்பேரவையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

19 அரசு மருத்துவமனைகள் ரூ.1018.85 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

தென்காசி அரசு மருத்துவமனை ரூ.10 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நவீன நுண் கதிர் அறை ரூ.1.90 கோடி செலவில் கட்டப்படும்.

தமிழகத்தில் 25 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவதற்கான நவீன உபகரணங்கள் ரூ.5 கோடி செலவில் வழங்கப்படும்.

திருவண்ணாமலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி களக்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கித் திட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும்.

காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். 

எலிக்கொல்லி பசையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.
-  அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அடுத்த மோரனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம்.

பள்ளி ஆய்வகத்தில் இருந்த மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என நினைத்து மாங்காய் உடன் சேர்த்து சாப்பிட்ட 11 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

* பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தந்தைக்கு தூக்குத் தண்டனையும் உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை -  சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

* குரூப் 4 தேர்வு: இதுவரை இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கு முன், 2017-ம் ஆண்டில் 20,76,200 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்தது.

TNPSC தேர்வு வரலாற்றிலேயே இந்த தேர்வுக்குத்தான், அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.
பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages