அக்னிப்புரட்சி இன்றைய (30.04.2022) முக்கிய செய்திகள்.
* ரஷ்யா போர் தொடுத்த பிறகு, முதல்முறையாக அடுத்த மாதம் 11ம் தேதி ஜெர்மணி அணியுடன் நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாட உள்ளது உக்ரைன் அணி!
* நாகப்பட்டினம் : திருச்செங்காட்டங்குடி தேர் திருவிழாவில் சக்கரத்தில் சிக்கி தீபராஜன் என்ற தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழப்பு
* கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர மீண்டும் சீனா வரலாம் என்று சீன அரசு அறிவிப்பு
மாணவர்கள் வரும் 8ம் தேதி முதல் சீனாவில் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யலாம்
பதிவு செய்யும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்த பின், படிப்படியாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் - சீன அரசு
* நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே, பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.
சில நாட்களுக்கு முன், அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் அந்த மாணவர் படுகாயமடைந்திருந்தார்.
* மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை
- அமைச்சர் செந்தில் பாலாஜி
* எரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்; பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி 9 வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தேர்ச்சி வழங்க வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்
* ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள், கண்ணாடி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டுவர வேண்டாம்;
மீறி எடுத்து வந்தால் சோதனைச்சாவடியில்
பறிமுதல் செய்யப்படும் -மாவட்ட காவல்துறை
* நாகை திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் ஆலய தேர்த் திருவிழாவில் தேர் சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* சென்னையில் இயங்கும் நிசான் மோட்டார் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிறுவனம் மூடப்படுவதால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்- ஓ.பன்னீர்செல்வம்.
* தேனியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்.
தேனி மாவட்டத்தில் ரூ.114 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.74.21 கோடி மதிப்பிலான 102 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தேனி மாவட்டத்தில் ரூ.74 கோடி மதிப்பில் 10,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கலைஞர் ஆட்சியியல் ரூ.32 கோடியில் கட்டப்பட்டது.
சோத்துப்பாறை அணையால் 32 கிராமங்கள் பயன்பெறுகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேனி மாவட்ட மக்களின் கனவு திடமான 18ம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசுதான்.
தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்று வரும் 7ம் தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது.
அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றினோம்.
91 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் இலங்கை தமிழர்களுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சி.
மத்திய அரசு, மற்ற மாநிலங்கள் குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை குறைத்தது.
5 ஆண்டுகளில் செய்யவேண்டியதை ஓராண்டில் செய்து முடித்திருக்கிறது திமுக அரசு.
குறுவை சாகுபடியில் திமுக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* டெல்லியில் முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
நீதித்துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து கூட்டு மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்பு.
* ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்:
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.
இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு.
* இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு.
நரவனே ஓய்வு பெறுவதையொட்டி, தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்.
* நெல்லை மாவட்டம் அம்பை அருகே பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகக் குழு ஆய்வு செய்ய வேண்டும்-நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு.
* மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.
மசாஜ் சென்டரின் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்த போலீசாருக்கு அதிகாரம் உள்ளது.
விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில் வழக்கை ரத்து செய்ய முடியாது - உயர் நீதிமன்றம்.
* பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை.
சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஸியோமி மீது நடவடிக்கை.
* பெட்ரோல், டீசல் வரியை தமிழ்நாடு குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் விமர்சனத்தை முதலமைச்சர் மறுக்கிறார்
மத்திய அரசை எதிர்த்து நடந்து கொள்வது முதலமைச்சருக்கு சரியில்லை; பிரதமர் காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டார் -முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
* பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள்தான் காரணம் என பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும்தான் விலை உயர்வுக்கு காரணம்-விசிக தலைவர் திருமாவளவன்.
* ஐபிஎல் : சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி தொடர்வார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் ஜடேஜா ஒப்படைத்துள்ளார்.
* திருவண்ணாமலை விசாரணைக் கைதி தங்கமணி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு.
No comments:
Post a Comment