வேலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு!
கட்சி அமைப்பு மாவட்டம் வாரியாக பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இன்று வேலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்.
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, வேலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் கே.எல். இளவழகன், மாவட்டத் தலைவர் பி.கே.வெங்கடேசன் மற்றும் அந்த மாவட்டத்திற்குட்பட்ட 13 ஒன்றியங்கள், 4 நகரங்கள், 6 பேரூர்களைச் சேர்ந்த 42 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்.
No comments:
Post a Comment