அக்னிப்புரட்சி இன்றைய (03.04.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ரூ.108.96க்கு விற்பனை.
டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.99.04க்கு விற்பனை.
கடந்த 13 நாட்களில் 11 வது முறையாக பெட்ரோல் ரூ.7.56, டீசல் ரூ.7.61 அதிகரிப்பு.
* எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் 1 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
* இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கம்.
வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன.
அவசர நிலை பிரகடனப்படுத் தப்பட்டுள்ள நிலையில் முடக்கம்.
* சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீனா ஏவிய Chang Zheng 5B ராக்கெட்டின் பாகங்கள் நேற்றிரவு எரிந்த நிலையில் இந்தியாவில் விழுந்தது
* தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு உண்டு- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
நான் சொன்னது போல் இறுதி தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
* ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட்.
வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.
நெத்தி கண்டி ஆஞ்சநேயர் கோயிலில் வாகன பூஜை நடந்த போது புல்லட்டில் தீப்பற்றியது
உடனே தீயை அணைக்க முயற்சித்த போது புல்லட் திடீரென வெடித்து சிதறியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புல்லட் வாகனம் தீ பற்றியது குறித்து விசாரணை.
* பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து, 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அந்நாட்டு அதிபர் உத்தரவு.
பிரதமர் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர்.
* பெரம்பலூர்: சிறுவாச்சூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் மலையப்ப நகர் பிரிவு சாலை பகுதியில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
* தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம்
மின்னஞ்சல் மூலமாக பள்ளிகளுக்கு புதிய வினாத்தாள்கள் அனுப்பி தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவிப்பு
* கொரோன: தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன
தமிழகத்தில் கட்டாய தடுப்பூசி என்பதை திரும்ப பெற்றது தமிழக அரசு
கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை.
தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.
தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் கட்டுப்பாடுகளை திரும்ப பெற்று சுகாதாரத்துறை உத்தரவு.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மக்கள் நல்வாழ்வுத் துறை.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- மக்கள் நல்வாழ்வுத்துறை
No comments:
Post a Comment