திருப்பூர் தாராபுரத்திலிருந்து....
ஜெர்மனியின் ப்ரேமெர்ஹோபனுக்கு..
பாட்டாளி பெண்ணின் படிப்புப் பயணம்! மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அ.இரவிச்சந்திரனின் மகள் ஜானேஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து பன்னாட்டு அளவிலான ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிப்புலமைத் தேர்வில் வெற்றி பெற்று ஜெர்மனியின் ப்ரேமெர்ஹோபனில் உள்ள Hochschule Bremerhaven பல்கலைக்கழகத்தில் M.S.( Embedded system design), என்ற முதுநிலை உயர்கல்வி கற்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஜெர்மனி புறப்படுவதற்கு முன் திண்டிவனத்தில் இன்று என்னை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். உயர்கல்வியில் சாதனைகளை படைக்க வாழ்த்தினேன்.
’’அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பு எதற்கு?” என்ற
பிற்போக்குத்தனமான
கேள்வியை எழுப்பியே பெண்களின்
உயர்கல்வி ஒரு காலத்தில் தடுக்கப்பட்டது.
அதை வெற்றிகரமாக முறியடித்துள்ள ஜானேஸ்வரி, அழகின் சிரிப்பு கவிதையில் பாரதிதாசன் எழுதிய கனவு வரிகளான,
’’கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில் ஒளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!’’
என்பதை நிரூபிக்க ஜெர்மனி செல்கிறார்.
அந்தப் பெண் அனைத்திலும் சாதிக்க
நாம் அனைவரும் வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment