அக்னிப்புரட்சி இன்றைய (01.05.2022) முக்கிய செய்திகள்.
* பெட்ரோல், டீசல் விலையில் 25வது நாளாக இன்றும் மாற்றமில்லை; சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை.
* மே தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தலைமை அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சி.
மே தின கொடியை மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.
* எல்.பி.ஜி சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு:
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை ₹102.50 உயர்ந்து, ₹2355.50-ஆக விற்பனை.
* தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாமல், அவர்களை வாழ வைக்ககூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது-மே தின விழாவில் முதலமைச்சர் உரை.
அண்ணா, கருணாநிதி ஆட்சியில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடுதான் இருந்தனர்; இப்போதும் அப்படியே இருக்கின்றனர்.
மனிதனை மனிதனே இழுத்த கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு.
இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட விவகாரம்.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு.
* அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், இனி வரும் காலங்களில் 'ஹிப்போகிரேடிக்' உறுதிமொழியை தவறாது கடைப்பிடிக்க அறிவுறுத்தல்.
சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவு- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்.
* நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு அமைத்தது தமிழக அரசு.
அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைப்பு.
தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழும் நிலையில் நடவடிக்கை.
* இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (மே 3) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
* கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் - முதல்வர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' என அழைக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* சென்னை : மறைந்த நடிகர் விவேக்கின் இல்லம் அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலை, 'சின்ன கலைவாணர் விவேக் சாலை' என பெயர் மாற்றம்.
நடிகர் விவேக் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு உத்தரவு.
* மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பலாம் - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்.
இலங்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அமைச்சர் கடிதம்.
* ஐபிஎல் 2022 : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
* இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment