அக்னிப்புரட்சி இன்றைய (02.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.05.2022) முக்கிய செய்திகள்.

* கடும் பொருளாதர நெருக்கடி காரணமாக, இலங்கையை சேர்ந்த 2 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு.

* பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பயணம்.
ஜெர்மனிக்கு இன்று அதிகாலை பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

* கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் உத்தரவை மாநில அரசுகள் நீக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.

* நீட் தேர்வு - அவகாசம் நீட்டிப்பு:
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 6-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 15-ம் தேதி வரை நீட்டிப்பு.
இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.

* தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை:
கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது.

தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை.

ஹால் டிக்கெட் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க நேரிடும் - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்.

* MBA, MCA, ME, M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர நடத்தப்படும் TANCET தேர்வுக்கான ஹால் டிக்கெட் tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியீடு.

* சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினரை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் புதிதாக இணையவுள்ளவர்களை வரவேற்கிறேன்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக திமுக எப்போதும் குரல் கொடுக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளைவிட அதிகமாக இந்த ஓராண்டில் செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு இதே நாளில் தான் திமுக வெற்றி பெற்றது.

* இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்.

இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* கோடை கால வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

* மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை - மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவு.

பல்லக்கை மனிதர்கள் தூக்கிச் செல்ல திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் உத்தரவு.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.38,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,841க்கு விற்பனையாகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.30க்கு விற்கப்படுகிறது.

* இஸ்லாமிய பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளுக்கு நல்வாழ்த்துகள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் வாழ்த்து.

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றுவோம் - ஓபிஎஸ், ஈபிஎஸ்.

* கேரளா: காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

இதுவரை அந்த உணவக
த்தில் ஷவர்மா சாப்பிட்ட 45 பேருக்கு பாதிப்பு, மருத்துவமனைகளில் அனுமதி.

உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் கைது - உணவகத்திற்கு சீல்.

* வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்:

கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.

கல்வி, விளையாட்டுத் திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக, இந்திய, மாநில அளவில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.

செயல்வழிக்கற்றலை ஊக்கும்விக்கும் வகையில் பள்ளிகள் தோறும் காய்கறித் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழு உறுதுணையுடன் நடத்தப்படும்.

போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் குறித்து விழிப்புணர்வு.

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும்.

மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்தம் படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கென இதழ்கள் வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages