ரமலான் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
ரமலான் மாதத்தில் நோன்பிருந்து ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பக்கத்து வீட்டிலிருப்பவர் பசியோடு இருந்தால் தான் புசிக்கக் கூடாது, அவர்கள் பசியை போக்கிய பின்னரே தான் உண்ண வேண்டும். தன் வருவாயில் 2% மற்றவர்களுக்கு கொடுத்துதவும் ஈகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட உன்னத,உயரிய மனிதகுல வாழ்வியல் நெறிகளை எடுத்துரைத்துள்ளது நபிகள் நாயகம் _இஸ்லாம் மார்க்கம்.
அன்பும் அமைதியும் பெருகி, சகோதர நல்லிணக்கமும் மனித நேயமும் நிலைத்து அனைவரும் மகிழ்ச்சி பொங்க வாழும் நிலை வேண்டும்.
ரமலான் திருநாளில் பள்ளிவாசல் தொழுகையில் பங்கேற்று பெரியவர்கள்,இளைஞர்கள்,சிறுவர்கள்,சிறுமிகள் அனைவரும் அன்பைப் பரிமாறி, கட்டித் தழுவி மனித நேய சகோதர நல்லிணக்கத்தை உணர்த்தி, தங்கள் இல்லங்களில் உணவுப் பகிர்ந்து உண்ணும் இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அனைவரும் ரமலான் முதல் ஆரோக்கியம், நலம், வளம்,புகழ்,பெருமை பெற்று நீடூழி வாழ இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
No comments:
Post a Comment