அக்னிப்புரட்சி இன்றைய (04.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.05.2022) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது என இன்று முடிவு -பள்ளிக்கல்வித்துறை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

* அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று துவங்குகிறது.

தமிழகத்தில் அதிக வெப்பத்தை கொடுக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி, 28 ஆம் தேதி முடிவடைகிறது.

இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தன் மூன்றரை சதவீத பங்குகளை விற்று ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

இன்று முதல் 9 ஆம் தேதி வரை பொது வெளியிட்டுக்கு வரும் எல்.ஐ.சி.யின். ஒரு பங்கின் விலை 902 முதல் 949 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

22 கோடியே 13 லட்சம் பங்குகளை வெளியிட்டு 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பங்குகளின் விலையில் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு 45 ரூபாயும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

* பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்காக ரூ 2.38 கோடியில் 29 புதிய வாகனங்கள்-தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

* விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளனர்.

* கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் வைத்து மரியாதை.

இன்று சட்டப்பேரவையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் சேகர்பாபு, மறைந்த முதலமைச்சர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அவரது நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

* பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு.

* திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தங்கமணியை கைது செய்த காவல்துறையினர் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

* தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்.

பழம் பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டணப் பிரவேசம் நடைபெற்று வருகிறது.

பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள்.

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்வு.

பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து மனமுவந்து சுமந்துவருவது ஒரு ஆன்மிக நிகழ்வு- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திடீரென தடை.

மதம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை கூடாது. மனிதனை மனிதன் இழுத்து கூலி வாங்குவதே தவறு,

இது கூலி வாங்கும் நிகழ்வல்ல; தாய், தந்தைக்கு சேவை செய்வது போன்றது- பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்.

* பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி முதல்வர் நல்ல முடிவெடுப்பார்.
சிலர் இந்த விவகாரத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள்.

தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும். ஆதீனங்களை அழைத்து ஆலோசனை பெற்றவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு.

* மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இடமாற்றம் ரத்து.

மீண்டும் அதே பணியில் அமர்த்தப்படுவார்; கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவர்,

தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதலமைச்சரின் உத்தரவுப்படி மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* திட்டமிட்டு ஒருசிலர் திமுக ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பது போல சித்தரிக்கின்றனர்.

அதை இங்கே பதிவு செய்ய அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கின்றனர்.

இது திராவிட மாடல் ஆட்சி, அண்ணா உருவாக்கிய ஆட்சி. எனவே யாருக்கும் அடிபணிய மாட்டோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் மீது  ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை?

குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கவே தேவையில்லையே என்பதே எங்களது கருத்து.

சட்டம் தெளிவாக உள்ளது, அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்- உச்சநீதிமன்றம்.

அமைச்சரவை முடிவு, தீர்மானங்கள் சட்ட சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தால் அதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியும், அதற்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு.

மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் - உச்சநீதிமன்றம்.

பேரறிவாளன் விடுதலை வழக்கு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க வில்லை என்றால் அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்- உச்சநீதிமன்றம்

* சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை தமிழக அரசின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்திட வேண்டும் - முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

* 1- 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது, தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வரத் தேவையில்லை.

வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் அன்பில் மகேஷ்.

* நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக அவரது செயலாளர் சற்றுமுன் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் மசோதா குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும்- சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

* குறுகிய கால கடன்களுக்கான வங்கி வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தி அறிவித்தது ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வீட்டுக்கடன், வாகனகடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.

* சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை அறிவிப்புகள்.

1000 திருக்கோயில்களில் ₹500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.

திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் திருவரசு ₹1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பணிகள் ₹10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* வழக்கு விசாரணைக்காக வரும் நபர்களை துன்புறுத்தக் கூடாது-காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

காவல் நிலைய துன்புறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தால், நீதிமன்றம் கண்மூடி இருக்காது.

ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக்கூடாது என விஜயலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* விசாரணை கைதி மரணம் - 13 இடங்களில் காயம் என தகவல்.

விசாரணை கைதி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்.

விக்னேஷின் உடலில் லத்தியால் தாக்கியதற்கான காயங்கள் தலை, கண், உடலில் ரத்தம் கட்டிய காயங்கள், இடது கை, முதுகின் வலது பக்கத்தில் காயம், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு - பிரேத பரிசோதனை அறிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages