மே - 5 வணிகர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மே - 5 வணிகர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

மே - 5 வணிகர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி 
             
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கி வரும் வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணிகர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
              
நாட்டில் பெருந்தொழிலாக வளர்ந்துவரும் வணிகமும் அதிலும் சில்லரை வணிகமும் நாளுக்குநாள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. வரிவிதிப்பால் பாதிப்பு சில அதிகாரிகளால் அடிக்கடி நெருக்கடிகள் போன்ற பாதிப்புகளையும் சந்திக்கவேண்டியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களால் சில்லர வணிகம் உள்ளிட்ட பல்வேறு வணிகத்தொழிலும் பாதிக்கிறது.
              
சில்லரை வணிகம் பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க பலகட்டப் போராட்டங்களை நடத்தியது. வணிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் குடும்ப நலமுடன் வாழ இனிய வணிகர்தின நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages