அக்னிப்புரட்சி இன்றைய (09.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.05.2022) முக்கிய செய்திகள்.

* சென்னை, மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பாமக நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா(60) உயிரிழப்பு.

* கடந்த ஆட்சியில் பண்ருட்டி தொகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையை சிமெண்ட் வைத்து கட்டினார்களா?

களிமண்ணை வைத்து கட்டினார்களா? இரண்டும் இல்லாமல் கட்டினார்களா?- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆதிவராகநல்லூரில் வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கான நில எடுப்பு பணி.

ரூ.96.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசின் பரிசீலனையில் உள்ளது- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

* புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம்; சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் முற்றுகை.

போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது.

* சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் குடிசைப்பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும்.

எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.

* புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு.

ஜிப்மரில் இந்தி மொழி கட்டாயத்திற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் ஆய்வு.

ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடனும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை.

* இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவிப்பு.

கொழும்புவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

* மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்- அமைச்சர் அன்பில் மகேஷ்.

* இலங்கை: காலிமுகத்திடலில் நடைபெற்று வந்த அதிபருக்கு எதிரான போரட்டக் களத்திற்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை கடும் கண்டனத்திற்குரியது. தாக்குதல்கள் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

* காவல்துறையினர் மன அழுத்தத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-  எடப்பாடி பழனிசாமி.

காவல்துறைகளில் காலியிடங்களை நிரப்பி காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் -இபிஎஸ்.

காவல்துறையினருக்கு மின்னணு பொருட்கள் வாங்க வழங்கப்படும் படியை உயர்த்த வேண்டும்-இபிஎஸ்.

* சென்னை, மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை விரைவாக நடைபெற்றது.

மயிலாப்பூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம்.

எந்தவித தாமதமும் இன்றி, குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர்.

புகார் பெறப்பட்ட 6 மணி நேரத்தில் வெளி மாநிலத்துக்கு தப்பிய குற்றவாளிகள் கைது.

ஆதாய கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

* இணையதளங்கள் அதிகரிப்பதால், குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன.

எதிர் வரும் காலங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் - பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச்சு.

* இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா என தகவல்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பதவி விலகியதாக தகவல்

* இலங்கையில் போராட்டக்காரர்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழப்பு.

ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற வாகனத்தை மறித்து போராட்டக்காரர்கள் தாக்குதல்.

இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து விடுமுறையிலுள்ள காவலர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு.

மகிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் தூண்டப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதுவரை 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் நிட்டம்புவ உள்ளிட்ட பகுதிகளில்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்

* இலங்கை ஆளும்கட்சி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டது

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இடம்பெற்ற மோதலில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நிட்டம்புவ துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயம் அடைந்துள்ளதாக இலங்கை காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

* இருக்கை வேண்டுமென்றால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை விளக்க அறிக்கை

* மகிந்த ராஜபக்ச பதவி விலகலை இலங்கை மக்கள் வீதிகளில் திரண்டு பால் சோறு சமைத்து கொண்டாடி வருகின்றனர்
https://fb.watch/cUwe5CzS_G/

* அமைச்சர் பேட்டியா? அல்லது ஜீயர் பேட்டியா?

சடகோப ராமானுஜர் ஜீயர் பக்கத்துல உட்கார்ந்து "முதலமைச்சருக்கு நன்றி முதலமைச்சருக்கு நன்றி"னு சேகர் பாபு எடுத்துக் கொடுக்குறாப்ல... அப்புறம் ஜீயர் நன்றி சொல்லவும், கைதட்டி ரசிக்கிறார் அமைச்சர்...

* இரவு 11க்குள் நிகழ்ச்சிகளை முடிக்க உத்தரவு:

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் முடிக்க வேண்டும்.

ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* இலங்கை, குருநாகலிலுள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு.

இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு சொந்தமான வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைப்பு.

இலங்கை ஹம்பன் தோட்டாவில் உள்ள ராஜபக்சேவின்  குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை  வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages