9.5.2022 இன்று சட்டமன்றத்தில் 2022 - 2023 ஆண்டுக்கான மானிய கோரிக்கை எண் 22 மற்றும் 23 உள் துறை காவல், தீயணைப்பு மற்றும் மீட்டிப் பணிகள் துறை, ஆயத்தீர்வை துறையின் மீது பா.ம.க தலைவர் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதன் சுருக்கம்.
ஒரு இராணுவத்தை போன்றது மாநில காவல்துறை,ஒரு ஆட்சிக்கு மிக முக்கியமானது காவல் படை அதனடிப்படையில்தான் அறிஞர் அண்ணா முதல் தற்போதைய முதல்வர் வரை காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
காவல்துறை சிறப்பாக செயல்பட வேண்டுமென தலைமை செயலாளர், முதலமைச்சர் செயலாளர், உள்துறை செயலாளர் காவல்துறை தலைமை இயக்குனர் போன்ற தலைசிறந்த அதிகாரிகளை வைத்து தினந்தோறும் காவல்துறையை கவனித்து வருகிறார் முதல்வர். அதற்கு எடுத்துக்காட்டாக அதிகாலை 3 மணிக்கு நடந்த திருச்சி மாவட்டம் களிமேடு கிராம சம்பவத்தை சுட்டிக்காட்டி அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் செயல்கள் வரவேற்புக்குரியது. அதேப்போல் தினேஷ் காவல்நிலைய மரணம் போன்ற பல சம்பவங்களில் முதல்வர் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளார், காவல்துறையின் நிர்வாக அமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது என்பதற்கு தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பது தொடர்ந்து நிலைக்க வேண்டும்.
காவல் துறையினரின் பணி ஒரு தனி மனிதனின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதும் பொதுமக்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அரசுக்கும் பாதுகாப்பாகவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் மாநிலத்தின் அமைதியை காப்பதும் காவல் துறையினரின் பணி.அதை நோக்கியே தமிழக காவல்துறையும் சென்று கொண்டிருக்கிற வேண்டும்
காவல்துறையில் இருப்பவர்கள் கண்ணிய மிக்கவர்களாக,கடமை தவறாதாவர்களாக,சட்டத்தை புரிந்து நிலைநாட்டுபவர்களாக,சட்டத்தின்படி விருப்பு வெறுப்பில்லாமல் நடுநிலையோடு செயலாற்ற கூடியவர்களாகவே காவல்துறையினர் இருக்கவேண்டும்.
கொரோனோ காலகட்டத்தில் மருத்துவர்கள் செவிலியர்களுடன் இணைந்து அவர்களுக்கு வலுசேர்க்கின்ற வகையில் பணியாற்றிய காவல்துறையினருக்கு இந்நேரத்தில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கீழ் அதிகாரிகள் வரை நேர்மையான தவறு செய்யாத திறமையானவர்களாக உள்ளார்கள் ஏனப்பட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை சரியாக நிலைநாட்ட வேண்டும்.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். நிரபராதிகள் பாதிக்கப்பட்டக்கூடாது என்பதில் காவல்துறை மனதில் வைத்து கவனமுடன் செயல்பட வேண்டும்.
கருவரை முதல் கல்லறை வரை பணி செய்பவர்கள் காவலர்கள்.காவல்துறை சிறப்பாக செயல்பட்டால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சிக்கு நல்ல பெயரும் மரியாதையும் ஓங்கும்.
மக்கள் தொகை பெருகியுள்ளது. அதற்கேற்றாற்போல் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு காவல்துறையினரின் பணியிடங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.
ஐநா சபை வலியுறுத்தி சொல்வது மக்கள் தொகையில் 222 பேருக்கு ஒரு காவலர் என சொல்கிறது.ஆனால் தமிழகத்தை பொறுத்த வரையில் 632 பேருக்கு ஒரு காவலர் என்ற நிலைதான் தற்போது வரை நீடிக்கிறது.ஆகவே காவல்துறையினரின் எண்ணிக்கை கூடுதலாக்க வேண்டும் தற்போது காவலர்களின் எண்ணிக்கை 1,17,350 என்ற அளவில் உள்ளது.மேலும் 10,000 பேர் பயிற்சி.1000 சார்பு ஆய்வாளர்கள்.இந்த அளவு என்பது போதாத ஒன்று.காவல்துறையினரை கூடுதலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினரின் தன்மை மற்றும் பணிச்சுமை குறித்து அவர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் - முதல் நிலை காவலர்,இரண்டாம் நிலை காவலர்,தலைமைக் காவலர், சார்பு ஆய்வாளர், ஆய்வாளர் சிறப்பு சார்பு ஆய்வாளர்,துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலை உள்ளவர்களுக்கும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்
முதல் நிலை காவலர்,இரண்டாம் நிலை காவலர்,சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதேபோல் இரண்டாம் நிலை காவலர்களாக 35 ஆண்டுகள் ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இந்த நிலையையும் அரசு உருவாக்க வேண்டும்.
கடற்கரை சாலையில் உள்ள காவல்துறைத் தலைமை அலுவலகம், எழும்பூர் மற்றும் அசோக் நகர் ஆகிய 3 இடங்களில் உள்ள காவல்துறை அலுவலகங்களை ஒன்றிணைத்து காவல்துறையின் தலைமை அலுவலகம் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த காவல் வளாகம் உருவாக்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக 2021 டிசம்பர் 6 முதல் ஜனவரி 6 வரை தொடர் காவல்துறை நடவடிக்கையால் 8 8,929 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின் இரண்டாவது முறையாக கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையில் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதும் பார்க்குமிடமெல்லாம் கஞ்சா,அபின் போன்ற போதைப் பொருட்கள் தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குகிறார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றது.குறிப்பாக பள்ளிகளுக்கு அருகிலேயே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்,இதையெல்லாம் போக்குவதற்கு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கட்டாயம் வேண்டும்.அதற்கென ஒரு பாடவேளையும் ஆசிரியரையும் நியமிக்க வேண்டும்.இதோடு மட்டுமல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி, விளையாட்டு வகுப்புகள் இருந்தால் மட்டுமே மாணவர்களை தீய வழியில் செல்லாமல் திருத்தப் முடியும்.
காவல்துறையில் காவலர் முதல் துணை கண்காணிப்பாளர் வரை வழங்கிக் வரக்கூடிய இடர்பாடு படி மாதம் 1000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக வழங்க வேண்டும், அதேபோல் மாதத்திற்கு 5 லிட்டர் எரி பொருளுக்காக வழங்கக்கூடிய தொகையை 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்
காவல்துறையினரின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்
கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு அரசு வேலைகளில் 30 விழுக்காடு வழங்கியிருந்தார். ஆனால் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு 40 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.இது வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போதைய அறிவிப்பில் பெண்களுக்கு குறைவான இடங்களே வழங்கப்பட்டுள்ளது.அதனை பரிசீலிக்க வேண்டும்
பெண் காவலர்கள்,பெண் அலுவலர்கள் காவல் துறையில் பணியாற்றுகின்றனர். அவர்களின் குடும்ப நிலலை, தனித்தன்மை, உடல்நிலை கருதி 8 மணி நேர பணி வரம்பை ஒரு மணி நேரம் குறைத்து 7 மணி நேரமாக ஆக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் குற்றவாளிகள் மீது புகார் அளித்தால் வழக்குகள் எடுத்துக் கொள்ளாமலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது.அவ்வாறு நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் மயிலம் தொகுதியில் 1 தீயணைப்பு நிலையமும்,தருமபுரி பள்ளப்பட்டியில் 1 காவல் நிலையம் ஒன்றும் அமைக்க வேண்டும்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக்காக போராடுகின்ற கட்சி. அதற்காகப் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.அவரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். ஆகவே பா.ம.கவினர் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்
இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
பா.ம.க தலைவர் அண்ணன் ஜி. கே. மணி அவர்களின் கோரிக்கைகளை ஏற்று வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது.
மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு.
பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-யிலும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
Home
அண்மை செய்திகள்
9.5.2022 இன்று சட்டமன்றத்தில் 2022 - 2023 ஆண்டுக்கான மானிய கோரிக்கை எண் 22 மற்றும் 23 உள் துறை காவல், தீயணைப்பு மற்றும் மீட்டிப் பணிகள் துறை, ஆயத்தீர்வை துறையின் மீது பா.ம.க தலைவர் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதன் சுருக்கம்.
9.5.2022 இன்று சட்டமன்றத்தில் 2022 - 2023 ஆண்டுக்கான மானிய கோரிக்கை எண் 22 மற்றும் 23 உள் துறை காவல், தீயணைப்பு மற்றும் மீட்டிப் பணிகள் துறை, ஆயத்தீர்வை துறையின் மீது பா.ம.க தலைவர் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதன் சுருக்கம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment