அக்னிப்புரட்சி இன்றைய (11.05.2022) முக்கிய செய்திகள்.
* இலங்கை ஆளுங்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்தியா அடைக்கலம் அளித்திருப்பதாக பரவும் செய்தி போலியானது - இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம்
* யாழ்ப்பாணத்திலும் பரவத் தொடங்கிய வன்முறை!
இலங்கை யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அச்சம் காரணமாக இன்று நடக்கவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக இலங்கை பாராளுமன்ற அவைத்தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவிப்பு
* 'அசானி' புயலாக வலுவிழந்தது:
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலைக்கொண்டிருந்த 'அசானி ' புயலாக வலுவிழந்தது.
ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் அசானி புயல் நிலைக்கொண்டுள்ளது.
நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அசானி வலுவிழக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
* சென்னையில் 35 நாட்களாக இன்றும் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வருகிறது.
* ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் உள்ளனர்.
கடற்படை இல்லம் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது.
Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால் மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சம்.
* போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.
கடலூர்: பெரியகுப்பம் பகுதியில் உள்ள இயங்காத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளையடிக்க சென்றவர்கள், போலீஸ் மற்றும் சுத்திகரிப்பு நிலைய காவலாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
போலீஸ் நின்றிருந்த இடத்துக்கு அருகில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்தது; நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை.
* இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?
இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழ்நாட்டுக்குள் தேசவிரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.
தேசவிரோத சக்திகள் ஊடுருவலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழ்நாடு காவல்துறை, பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல்.
* இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழு உறுதுணையாக இருக்கும் - இலங்கையின் இந்திய தூதரகம் ட்வீட்
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,296க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,787க்கு விற்பனை.
* மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.30 வரை குறைய வாய்ப்பு - ஓபிஎஸ்.
* சென்னை, டிடிகே சாலையில் நடைபெறும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வேண்டும் என்பதே என் விருப்பம்- சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில், 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை.
தென் மண்டலத்தில் ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதில் பெருமை. ஏற்றுமதியில் தமிழ்நாடு இன்னும் பன்மடங்கு உயர முடியும்;
இந்தியாவில் ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே என் லட்சியம்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தேசத்துரோக வழக்கு பதிய உச்சநீதிமன்றம் தடை.
தேசதுரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது.
தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் 124 (A) சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தேசவிரோத சட்டம் அமலுக்குவந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைத்து உத்தரவு.
மத்திய அரசும், மாநில அரசுகளும் சட்டத்தை பயன்படுத்த தடை. ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்ச நீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு.
* இலங்கை வன்முறை காரணமாக 1 நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2 காவல் அலுவலர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் தகவல்.
* நீதிமன்றங்கள் அரசாங்கத்தை மதிக்க வேண்டும்!
நாங்கள் நீதிமன்றங்களை மதிக்கிறோம். அரசு மற்றும் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது
அந்த ‘இலக்குவ ரேகையை’ (எல்லை) யாரும் தாண்டக் கூடாது என தேச துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடுவண் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு விமர்சனம்
* குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
தேர்வர்கள் tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
* தமிழக அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை - போக்குவரத்து துறை.
No comments:
Post a Comment